2015 ஆம் ஆண்டின் இளைஞர் நீதி (குழந்தைகள் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு) சட்டத்தின் விதிமுறைகளின்படி அமைக்கப்பட்டுள்ள இளைஞர் நீதி குழுமத்திற்கு 2 சமூக நல உறுப்பினர்களை நியமிக்கப்படுவதற்காக கீழே குறிப்பிடப்பட்டுள்ள தகுதிகளைக் கொண்ட தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இளைஞர் நீதி குழுமத்திற்கு சமூக நல உறுப்பினர்கள் அரசால் மதிப்பூதிய அடிப்படையில் நியமிக்கப்பட உள்ளனர் மற்றும் இப்பதவி அரசு பணி அல்ல.
குழுமத்தின் பெயர்.
இளைஞர் நீதி குழுமம்
பதிவியின்
பெயர்,
2 சமூக நல உறுப்பினர்
தகுதி.
விண்ணப்பதாரர்கள் குழந்தைகள் தொடர்பான உடல் நலம், கல்வி அல்லது குழந்தைகளுக்கான நலப்பணிகளில் குறைந்தது 7 ஆண்டுகள் முனைப்புடன் ஈடுபாடு கொண்டவர் அல்லது குழந்தை உளவியல் அல்லது மனநல மருத்துவம், சமூகவியல் அல்லது சட்டம் ஆகியவற்றில் ஏதேனும் பட்டம் பெற்ற தொழில்புரிபவராக இருத்தல் வேண்டும்.
வயது.
35 வயது முதல் 65 வயதுக்குள்
இதற்கான விண்ணப்பிக்க படிவத்தை செங்கல்பட்டு மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகின் மூலம் பெற்றுக்கொள்ளலாம். தகுதிவாய்ந்த நபர்கள் மேற்கண்ட பதவிக்கு அதற்கான அமைந்த படிவத்தில் (செய்தி வெளியீடு நாளிலிருந்து 15 நாட்கள் வரை) கீழ்க்கண்ட முகவரியில் கிடைக்கப்பெறுமாறு விண்ணப்பிக்கலாம்.
இயக்குநர்,
குழந்தைகள் நலன் மற்றும்
சிறப்புச் சேவைகள் துறை,
எண்.300,புரசைவாக்கம் நெடுஞ்சாலை,
சென்னை - 600 010.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் மேற் குறிப்பிட்ட அலுவலகத்திற்கு வந்து சேரவேண்டும். தகுதி மற்றும் அனுபவத்தின் அடிப்படையில் நியமனம் அமையும். இது குறித்து அரசின் முடிவே இறுதியானது.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 12.07.2024
அதிகாரப்பூர்வ இணையதளம்
செல்ல |
|
அதிகாரப்பூர்வ அறிவிப்பு/
விண்ணப்பம் பதிவிறக்கம் செய்ய |
கருத்துரையிடுக