தமிழ்நாடு அரசு - இந்து சமய அறநிலையத்துறை
அருள்மிகு கபாலீசுவரர் திருக்கோயில்
மயிலாப்பூர், சென்னை - 600004.
ந.க.எண்.30/2023/ஆ1| நாள்: 29.10.2024
மாணவ / மாணவிகள் சேர்க்கை அறிவிப்பு - 2024 - 2025 ஆம் கல்வியாண்டு
இத்திருக்கோயில் நிர்வாகத்தின் கீழ் நடத்தப்படும் ஓதுவார் பயிற்சிப் பள்ளியில் முழு நேரம் / பகுதி நேரமாக கல்வி பயில மாணவ / மாணவிகள் சேர்க்கைக்கு இந்து மதத்தைச் சார்ந்த கீழ்க்கண்ட தகுதியுடையவர்களிடமிருந்து எதிர்வரும் 29.11.2024 ஆம் தேதி மாலை 05.45 மணி வரை உரிய சான்றுகளுடன் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
ஓதுவார் பயிற்சிக்கு விண்ணப்பிக்க தகுதிகள் மற்றும் இதர விவரங்கள்
1. 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
2.01.11.2024 அன்று 14 வயது பூர்த்தி அடைந்தவராகவும், 24 வயதிற்குட்பட்டவராகவும் இருக்க வேண்டும்.
3. முழு நேர வகுப்பின் பயிற்சிக் காலம் மூன்று ஆண்டுகள் மட்டும்.
4. பகுதி நேர வகுப்பின் பயிற்சிக் காலம் நான்கு ஆண்டுகள் மட்டும்.
5.காணொளி மூலம் தொலைதூர பயிற்சி வகுப்பின் பயிற்சிக் காலம் நான்கு ஆண்டுகள் மட்டும்.
6. நல்ல குரல் வளம் பெற்றிருக்க வேண்டும்.
7. இந்து சைவ சமய கோட்பாடுகளை கடைபிடிப்பவர்களாக இருக்க வேண்டும்.
8. முழு நேரம் பயிலும் ஒவ்வொருவருக்கும் மாதம் 1-ற்கு ரூ.4000/- ஊக்கத் தொகை வழங்கப்படும்.
9. பகுதி நேரம் பயிலும் ஒவ்வொருவருக்கும் மாதம் 1-ற்கு ரூ.2000/- ஊக்கத் தொகை வழங்கப்படும்.
10.முழு நேர வகுப்பு பயில்பவர்களுக்கு உணவு, உடை, தங்குமிடம், மருத்துவ வசதி திருக்கோயில் மூலம் கட்டணமில்லாமல் வழங்கப்படும்.
சேர்க்கை படிவம் திருக்கோயில் அலுவலகத்தில், அலுவலக நேரத்தில் பெற்றுக் கொள்ளலாம்
.
மேலும், https://mylaikapaleeswarar.hrce.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
திருக்கோயில் மின்னஞ்சல் முகவரி : jceochn_1.hrce@tn.gov.in
✅ அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் பதிவிறக்கம் செய்ய : இங்கே கிளிக் செய்யவும்
கருத்துரையிடுக