தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறை
காசி ஆன்மிகப்பயணம்
2024-2025 ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்ற அறிவிப்பு எண்.23ல் அறிவித்துள்ளபடி. இராமேசுவரம், அருள்மிகு இராமநாதசுவாமி திருக்கோயிலிலிருந்து காசி, அருள்மிகு விஸ்வநாதசுவாமி திருக்கோயிலுக்கு ஆன்மிகப் பயணம் அழைத்துச் செல்ல இந்து சமய அறநிலையத்துறையின் இணை ஆணையர் மண்டலங்களில் வசிக்கும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களிடமிருந்து மண்டலத்திற்கு 21 நபர்கள் வீதம் 420 நபர்களை தேர்வு செய்ய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
விண்ணப்ப படிவங்களை தமது விலாசம் அமைந்துள்ள மண்டல இணை ஆணையர் அலுவலகத்திலிருந்து பெற்றுக் கொள்ளலாம்.
விண்ணப்பத்துடன் இணைக்கப்பட்டுள்ள |நிபந்தனைகளின்படி பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவங்களை உரிய இணைப்புகளுடன் மீள அதே மண்டல இணை ஆணையர் அலுவலகத்திற்கு 16.12.2024க்குள் அனுப்ப வேண்டும்.
பிற இணை ஆணையர் அலுவலகத்திற்கு அனுப்பப்படும் விண்ணப்பம் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படமாட்டாது, மண்டல இணை ஆணையர்கள் பரிந்துரைக்கும் தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் மட்டுமே ஆன்மிகப் பயணத்திற்கு தேர்வு செய்யப்படுவர்.
நிபந்தனைகள் :
1) விண்ணப்பதாரர் இந்து மதத்தைச் சார்ந்தவராகவும், இறை நம்பிக்கை உடையவராகவும். 60 வயது முதல் 70 வயதிற்கு உட்பட்டவராகவும் இருத்தல் வேண்டும்.
2) தகுதியான விண்ணப்பங்கள் மட்டுமே மண்டல இணை ஆணையர்களால் பரிசீலனைக்கு ஏற்றுக்கொள்ளப்படும்.
(3) இதர நிபந்தனைகள் இத்துறை மண்டல இணை ஆணையர் அலுவலகங்களிலும், www.hrce.tn.gov.in என்ற இணைய தளத்திலும் தெரிந்துகொள்ளலாம்.
தக்கார் / இணைஆணையர்,
அருள்மிகு இராமநாதசுவாமி திருக்கோயில்,
இராமேசுவரம்.
இணை ஆணையர்/ செயல் அலுவலர் அருள்மிகு இராமநாதசுவாமி திருக்கோயில், இராமேசுவரம்
✅ அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் பதிவிறக்கம் செய்ய : இங்கே கிளிக் செய்யவும்
கருத்துரையிடுக