வேலை இல்லாதவர்களுக்கு உதவித்தொகை பெறுவதற்கான குறித்த முழு விவரம் விரிவாக்க காண்போம்!
இன்றைய காலத்தில் உரிய வேலை இல்லாலமல் இருப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. குறிப்பாக
பொறியியல்
படிப்பு
முடித்த
பல இளைஞர்கள் தகுதியான வேலை கிடைக்காமல் கஷ்டப்பட்டு கொண்டிருக்கின்றனர்.
இந்நிலையில் படித்து முடித்துவிட்டு வேலைவாய்ப்பு இல்லாத இளைஞர்களின் நலனிற்காக தமிழக அரசு உதவித் தொகை வழங்கும் திட்டத்தை கடந்த 2006 ஆம் ஆண்டு முதல் செயல்படுத்தி வருகிறது.
1. வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து முறையாக புதுபித்தவர்களுக்கு இந்த உதவித் தொகை கிடைக்கும்.
2. பத்தாம் வகுப்பில் தோல்வி அடைந்தவர்
3. பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்கள்
4. பட்டயப்படிப்பு மற்றும் அதற்கு இணையான கல்வி படிப்பு முடித்தவர்கள் .
இத்திட்டத்திற்கு தகுதியானவர்கள் ஆவர்.
செப்டம்பர் 30,2024 அன்றைய தேதியில் இருந்து 5 ஆண்டுகள் நிறைவுற்று வேலைக்காக காத்திருக்கும் இளைஞர்கள் மற்றும் வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து ஓர் ஆண்டு நிறைவடைந்து வேலைவாய்ப்பிற்காக காத்திருக்கும் மாற்றுத் திறனாளிகளுக்கு தமிழக அரசு உதவித் தொகை வழங்கிவருகிறது.
தகுதி:
1)விண்ணப்பதாரரின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.72.000க்குள்
இருக்க வேண்டும்.
2) பழங்குடியினா்
விண்ணப்பதாரர்
45 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.
3) இதர வகுப்பை சேர்ந்த விண்ணப்பதாரர் 40 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.
உதவித் தொகை விவரம்:
பத்தாம் வகுப்பில் தோல்வி - ரூ.200/- (ஒவ்வொறு மாதமும்)
பத்தாம் வகுப்பில் தேர்ச்சி - மாதம் ரூ.300/-(ஒவ்வொறு மாதமும்)
பன்னிரெண்டாம் வகுப்பில் தேர்ச்சி - ரூ.400/-(ஒவ்வொறு மாதமும்)
பட்டப்படிப்பு தேர்ச்சி - ரூ.600/-(ஒவ்வொறு மாதமும்)
மாற்றுத் திறனானிகளுக்கான ஊக்கத் தொகை விவரம்:
பத்தாம் வகுப்பில் தேர்ச்சி - ரூ.600/-(ஒவ்வொறு மாதமும்)
பன்னிரெண்டாம் வகுப்பில் தேர்ச்சி - ரூ.750/-(ஒவ்வொறு மாதமும்)
பட்டப்படிப்பு தேர்ச்சி - ரூ.1000/-(ஒவ்வொறு மாதமும்)
முழு விவரங்களை வேலை வாய்ப்பு அலுவலக இணையத்தளம் சென்று பார்வையிடவும்.
வேலைவாய்ப்பு இணையதள முகவரி.
விண்ணப்ப படிவங்கள் பதிவிறக்க :
https://tnvelaivaaippu.gov.in/download_ta.html
கருத்துரையிடுக