பட்டா மாறுதல் சிறப்பு முகாமின் போது மனுதாரர்கள் பட்டா மாறுதல் மனுக்களோடு சமர்ப்பிக்கப்பட வேண்டிய ஆவண விவரங்கள் பின்வருமாறு!!
1)மூல ஆவணங்கள்.
2) வில்லங்க சான்றிதழ்,
3) சிட்டா/கணினி சிட்டா
4) பட்டாதாரர் இறந்து இருந்தால் இறப்பு, வாரிசு சான்றிதழ் ,
5) உயில் என்றால் உயில் எழுதி கொடுத்தவரின்
இறப்பு சான்றிதழ்,
5) ஆதார் அடையாள அட்டை.
6)TSLR நகல் வேண்டுமெனில் ரூ.200/-கட்டணம் செலுத்த வேண்டும்.
7) நில அளவை செய்ய விண்ணப்பத்துடன் ரூ.800/-. செலுத்த வேண்டும்.
8) கூட்டுப்பட்டா மற்றும் தனிப்பட்டாவிற்கு ரூ.60/- செலுத்த வேண்டும்.
9) முல ஆவணங்கள், இறப்பு, வாரிசு, சான்றிதழ்கள் அனைத்தும் அசல் ஆவணங்கள் கொண்டு வரவேண்டும். இ-சேவை மையத்தில் விண்ணப்பத்துடன் பதிவு செய்தவுடன் அசல் ஆவணங்கள் மனுதாரர் வசம் கொடுத்துவிடப்படும்.
*குறிப்பு மேற்கண்ட கட்டணங்கள் அனைத்தும் இ-சேவை மூலமாக இணைய தள வாயிலாக செலுத்த வேண்டும். இதற்கென முகாம் நடைபெற உள்ள ஷர்ஷா மகாலில் பிரத்யேகமாக இ-சேவை மையம் அமைக்கப்பட்டுள்ளது*
கருத்துரையிடுக