கோயம்புத்தூர் மாநகராட்சி
அறிவிப்பு
நகர சுகாதார செவிலியர்கள் மற்றும் செவிலியர் பணியாளர்கள் தேவை
கோயமுத்தூர் மாநகராட்சி பொது சுகாதாரப்பிரிவின் கீழ் செயல்பட்டுவரும் 32 நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் காலியாகவுள்ள நகர சுகாதார செவிலியர்கள் (Urban Health Nurse) மற்றும் செவிலியர் பணியாளர் (Staff Nurse) பணியிடங்களை முற்றிலும் தற்காலிமாக ஒப்பந்த அடிப்படையில் பணிநியமனம் செய்வதற்கு நாள். 18/10/2024ம் தேதியன்று நேர்க்காணல் நடைபெறுகிறது.
பதவியின் பெயர்
நகர சுகாதார
செவிலியர்கள்
(Urban Health
Nurse). - 54 நபர்கள்
தகுதி
1. BSc Nursing
2. Auxiliary Nurse Midwife Course (2 Yrs)
3. Diploma in General Nursing and Midwife Course (DGNM) வரை தமிழ்நாடு செவிலியர் கவுன்சிலில் கட்டாயம் பதிவு செய்திருத்தல் வேண்டும்.
செவிலியர்
பணியாளர்கள்.
(Staff Nurse) -10 நபர்கள்
தகுதி:
3. BSc Nursing
4. Diploma in General nursing and Midwife Course (DGNM டிப்ளமோ GNM அல்லது பிஎஸ்சி நர்சிங் தேர்ச்சி பெற்று தமிழ்நாடு செவிலியர் கவுன்சிலில் கட்டாயம் பதிவு செய்திருத்தல் வேண்டும்.
1. இந்த பதவி முற்றிலும் தற்காலிகமானது.
2. எந்த ஒரு காலத்திலும் பணி நிரந்தரம் செய்யப்படமாட்டாது.
3. பணியில் சேருவதற்கான சுய விருப்ப ஒப்புதல் கடிதம் (Undertaking) அளிக்க வேண்டும்.
| நேர்க்காணலில் கலந்துகொள்பவர்கள் கொண்டுவர வேண்டியது:-
1. கல்விச்சான்றிதழ்கள் அசல் மற்றும் நகல்கள்,
2. முன்அனுபவ பணிச் சான்றிதழ்
3. இருப்பிட சான்றிதழ்/ திருமணச்சான்றிதழ் இருப்பின்
4. ஆதார் அடையாள அட்டை
5. கொரோனா பணிச்சான்றிதழ்
குறிப்பு:-
1. மேற்கொண்ட பதவிகளின் பணியிடம் மாறுதலுக்குட்பட்டது.
2. தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்படும் செவிலியர்கள் பின்வரும் காலங்களில் இராஜினாமா செய்தல் அல்லது பணியிலிருந்து நின்றுவிட்டால் நேர்க்காணலில் கலந்துகொண்ட நபர்களிலிருந்து மேற்படி பணியிடங்கள் நிரப்பப்படும். மேலும், பணியிலிருந்து விலகும் பொழுது முறையான காரணங்கள் இல்லாத பட்சத்தில் 3 மாத ஊதியம் பிடித்தம் செய்யப்படும் என ரூ.20/-க்கான முத்திரைத்தாளில் எழுதித்தர வேண்டும். 3. தகுதி வாய்ந்த நபர்கள் அனைத்து அசல் மற்றும் நகல் சான்றிதழ்களுடன் காலை 10.00 மணியளவில் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நேரில் ஆஜராகுமாறு கோரப்படுகிறது.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு/
விண்ணப்பம் பதிவிறக்கம் செய்ய |
கருத்துரையிடுக