அருள்மிகு மாசாணியம்மன் திருக்கோயில்
ஆனைமலை நகர் மற்றும் வட்டம் - கோவை மாவட்டம் வேலைவாய்ப்பு அறிவிப்பு
கோவை மாவட்டம், ஆனைமலை வட்டம் மற்றும் நகர், அருள்மிகு மாசாணியம்மன் திருக்கோயிலில் கீழ்கண்ட காலிப்பணியிடங்களுக்கு தகுதியுள்ள இந்து சமயத்தைச் சார்ந்த நபர்களிடமிருந்து 16.10.2024 மாலை 5.45 மணி வரை விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. அதற்கு பின்னர் வரப்பெறும் விண்ணப்பங்கள் எக்காரணத்தைக் கொண்டும் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது.
இதர விவரங்களை திருக்கோயில் அலுவலகத்தில் அலுவலக நாட்களில் அலுவலக நேரத்தில் நேரில் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம் மற்றும் திருக்கோயில் இணையதளத்தில் https://anaimalaimasaniamman.hrce.tn.gov.in-ல் தெரிந்து கொள்ளலாம்.
பதவியின் பெயர் :
நாதஸ்வரம்
பணியிட எண்ணிக்கை: 1
சம்பள விவரம் :
19500- 62000
Level 25
தகுதி:
அரசு விதி எண். 114 நாள் 03.09.2020-ன் படி
1. தமிழில் எழுதவும் படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும் மற்றும் 2.யாதொரு சமய நிறுவனங்கள் அல்லது அரசு
நிறுவனங்கள் அல்லது ஏனைய யாதொரு அரசால் அங்கீகரிக்கப்பட்ட யாதொரு நிறுவனங்களால் நடத்தப்படும் இசைப் பள்ளியில் நாதஸ்வர பயிற்சி சான்றிதழ் பெற்றிருக்கவேண்டும்.
நிபந்தனைகள்:
1. விண்ணப்பதாரர் 01.07.2024 அன்று 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 45 வயதுக்கு உட்பட்டவராகவும் இருத்தல் வேண்டும்.
2. விண்ணப்பங்கள் திருக்கோயில் அலுவலகத்தில் அலுவலக நாட்களில் காலை 10.00 மணி முதல் மாலை 5.45 மணி வரை ரூ. 100/- செலுத்தி நேரில் பெற்றுக் கொள்ளலாம்.
3. விண்ணப்பங்கள் உதவி ஆணையர்/செயல் அலுவலர், அருள்மிகு மாசாணியம்மன் திருக்கோயில், ஆனைமலை என்ற பெயரில் 16.10.2024 மாலை 5.45 மணிக்குள் திருக்கோயில் அலுவலகத்திற்கு வந்து சேரும்படி அனுப்ப வேண்டும்.
அதிகாரப்பூர்வ இணையதளம்
செல்ல |
|
அதிகாரப்பூர்வ அறிவிப்பு/
விண்ணப்பம் பதிவிறக்கம் செய்ய |
கருத்துரையிடுக