ஸ்ரீ வீரமாகாளியம்மன் கோயில் சிங்கப்பூரில் உள்ள பழமையான கோயில்களில் ஒன்றாகும் சிங்கப்பூரின் லிட்டில் இந்தியா 141,செராங்கூன் சாலையில் உள்ள இந்த கோவிலில் பணி புரிய கீழ் கண்ட பணியிடங்களுக்கு தகுதி உள்ளோர் விண்ணப்பிக்கலாம்
வேலை வாய்ப்பு
ஆலய அர்ச்சகர்கள் (சிவாச்சாரியார்)
அனுபவம்: குறைந்தது 5 ஆண்டுகள் கோயிலில் பணி புரிந்து இருக்க வேண்டும். சுவாமி அலங்காரம் செய்யும் குருக்கள் தாங்கள் அலங்காரம் செய்த அலங்கார படங்கள் 3 அனுப்பவும். அங்கீகரிக்கப்பட்ட பாடசாலை சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
மடப்பள்ளி (ஐயர் / ஐயங்கார்)
அனுபவம்: குறைந்தது 5 ஆண்டுகள் கோயில் அல்லது சமையல் துறையில் பணி புரிந்து இருக்க வேண்டும், நெய்வேதியங்கள்
பிரசாதங்கள் தவிர மற்ற இனிப்பு வகைகளும், டிபன் மற்றும் சாப்பாடு வகைகளும் சமைக்க தெரிந்து இருக்க ண்டும்.
பண்டாரம்
நித்திய கோயில் அபிஷேகம்,அலங்காரம்,அர்ச்சனை மற்றும் விசேச காலங்களில் கரகம், அக்னி கப்பரை மற்றும் படையல் பூஜை குறைந்தது 5 ஆண்டுகள் இருக்க வேண்டும்.
ஓதுவார்
குறைந்தது 5- 10 ஆண்டுகள் ஆலய அனுபவம் மற்றும் பயிற்சி சான்றிதழ் பெற்று இருக்க வெண்டும். தின நித்திய ஆலைய பூஜை, சிறப்பு வழிப்பாடு மற்றும் விசேஷ பூஜைகளில் பாயணம் செய்ய வேண்டும். தமிழ் எழுத மற்றும் பாடம் நடத்த அனுபவம் இருக்கவேண்டும்.
நாதஸ்வரம் தவில்
அனுபவம் குறைந்தது 5 ஆண்டுகள் கோயில் நிகழ்ச்சிகளில் வாசித்து இருக்க வேண்டும். சரளமாக தமிழ் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
ஆலய உதவியாளார்கள்
கோயிலில் பணியாற்றிய அனுபவம் இருக்க வேண்டும். தினசரி கோயில் சுத்தம் செய்தல், கழிப்பறை சுத்தம், பாத்திரம் கழுவுதல் விநியோக பிரசாதம் வழங்க உதவிசெய்தல் மற்றும் பராமரிப்பு வேலைகள் (Electrical, Plumbing) மற்றும் தமிழ் எழுத படிக்க தெரிந்து இருக்க வேண்டும்.
மேற்காணும் பணியிடங்களுக்கு விண்ணப்பம் செய்பவர்கள் வயது: 45க்குள் இருக்க வேண்டும்.
தகுதி சான்றிதழ்களுடன் தங்கன் பாஸ்ப்போர்ட்டின் முதல் மற்றும் கடைசி பக்கங்கள் பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள், வேலை மனு
கடிதம் ஆகியவற்றை இணைத்து கீழ்க்காணும் மின்னஞ்சல் (email) முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
கடிததத்தில் உங்கள் வீட்டு முகவரி, தொடர்பு கொள்ளவேண்டிய தொலைபேசி / மொபைல் எண் அவசியம் தேவை.
விண்ணப்பம் அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் (email) admin@srivkt.org
முக்கிய குறிப்பு: எல்லா விண்ணப்பங்களும் 08.10.2024 க்குள் மேற்குறிய மின்னஞ்சல் முகவரிக்கு வந்து சேர வேண்டும். நேர்முக தேர்வுக்கு தேர்ச்சிப் பெற்றவர்கள் மட்டும் மின்னஞ்சல் / தொலைபேசி மூலம் தொடர்பு கொள்ளப்படுவார்கள்
அதிகாரப்பூர்வ இணையதளம்
செல்ல |
|
அதிகாரப்பூர்வ அறிவிப்பு/
விண்ணப்பம் பதிவிறக்கம் செய்ய |
கருத்துரையிடுக