‘கூட்டுறவு’ செயலி மூலம் ஒர் நபர் ரூ.75 லட்சம் வரை வீட்டுக் கடன் மற்றும் தமிழக கூட்டுறவுத் துறை பயிர் கடன், நகைக்கடன் உள்ளிட்ட பல்வேறு வகையான கடன்களை மக்களுக்கு குறைந்த வட்டியில் தமிழக அரசு வழங்கி வருகிறது.
இந்த ஆண்டு ரூ.1 லட்சம் கோடி கடன் தமிழக மக்களுக்கு வழங்குவதற்கு கூட்டுறவுத்துறையின் மூலம் திட்டமிட்டுள்ளது.
இந்த நிலையில், கூட்டுறவு சங்கங்களை அனைத்தையும்
டிஜிட்டல் மயமாக்க தமிழக முதல்-அமைச்சர் உத்தரவிட்டுள்ளதை
தொடர்ந்து கூட்டுறவுச் சங்கங்கள் மற்றும் வங்கிகளில் இணையவழியில் கடன் பெற
விண்ணப்பிக்கும் வசதியுடன் கூடிய 'கூட்டுறவு' என்ற செயலியை கூட்டுறவுத் துறை அறிமுகப்படுத்தியுள்ளது.
ஒரு தனிநபருக்கு ரூபாய் 75 லட்சம் கூட்டுறவு' செயலிமூலம் வீட்டு கடன் வழங்கப்படுகிறது இந்த கடன் விண்ணப்பத்தினை இணையதளம் மூலமாகவும் விண்ணப்பித்து கடன் பெற முடியும்
இந்த செயலியின் மூலம் கூட்டுறவுத்துறையில் என்னென்ன கடன் உள்ளன.
அவற்றில் நமது தேவைக்கான கடன் வகைகள் மற்றும் அவற்றின் தகுதிகள் என்வென்று அறிந்து கொள்ளலாம்.
பயிர்
கடன்
மீன்
வளர்ப்பு கடன்
கால்நடை
வளர்ப்பு கடன்
கடன் விண்ணப்பம்
இ-வாடகை
வங்கி சேவை
செயலியில் இ-சேவை, மருந்தகம், கிடங்கு, நியாயவிலைக்
கடை, தொடர்புக்கு, அலுவலகம் என்ற தலைப்புகளில் மக்களுக்கான சேவைகள் அனைத்தும் ஒருங்கிணைத்து
வழங்கப்பட இச்செயலி உருவாக்கப்பட்டுள்ளது
பொதுமக்கள் மற்றும் சங்க உறுப்பினர்களால்
'கூட்டுறவு' செயலி மூலம் சமர்ப்பிக்கப்படும் விண்ணப்பமானது தொடர்புடைய கூட்டுறவு சங்கங்கள்
மற்றும் வங்கிகளுக்கு இணைய வழியின் மூலம் பெறப்பட்ட
விண்ணப்பப்படிவங்களை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வு செய்தும் கடன் வழங்குவதற்கான நடவடிக்கைகள்
மேற்கொள்வார்கள்
அந்த
வகையில், இந்த 'கூட்டுறவு' செயலி மூலம் அதிகபட்சமாக ஒர் நபருக்கு ரூ.75 லட்சம் வரை வீட்டுக் கடன் வழங்கப்படுகிறது.
கூட்டுறவு வங்கியின் வீடு கடனின் வட்டி வீதம்
8.5 சதவீதமாக இருப்பதுடன் இந்த கடனை அடைப்பதற்கு அதிகபட்சம் 20 ஆண்டுகளுக்கு செலுத்திக்கொள்ளலாம்
என்று நிர்ணயக்கப்பட்டுள்ளது.
என்னென்ன கடன், எப்படி விண்ணப்பிப்பது?
முதலில்
கடன் பற்றிய விவரம் அறிவதற்கு கூகுள் பிளே ஸ்டோரில் 'கூட்டுறவு' செயலியை பதிவிறக்கம் செய்ய வேண்டும்
(APP)செயலியை திறந்து, வங்கி சேவை பிரிவை தேர்வு செய்ய வேண் டும்.
அதைத் தொடர்ந்து கடன் தகவல்(information Button) பொத்தானை அழுத்த வேண்டும்.
அதில்,
வீட்டுக் கடன், மகளிர் தொழில் முனைவோர் கடன், எம்.எஸ்.எம்.இ. கடன், வேலைசெய்யும் பெண்களுக்கான கடன், மாற்றுத் திறனாளிகள் கடன், சில்லரை வணிகக் கடன், சுயஉதவிக்குழு கடன், தாட்கோ கடன், மனை வாங்கும் கடன், கல்விக் கடன், வாகனக் கடன்பயிர் கடன், மீன் வளர்ப்பு கடன், கால்நடை வளர்ப்பு கடன், அடமானக் கடன், குறுகிய கால கடன், நகைக் கடன், தனிநபர் கடன், ஓய்வூதியர் கடன், மூத்த குடிமக்களுக்கான அடமானக் கடன் உள் ளிட்ட பல்வேறு கடன்களின் விவரம்
(list) பட்டியலிடப் பட்டிருக்கும்.
அதில் கடன்களுக்கான
உச்சவரம்பு,
கடன் கால அளவு,
வட்டி வீதம்,
கடனுக்கான தகுதி
உள்ளிட்ட விவரங்கள் கொடுக்கப்பட்டு இருக்கும்.
உதராணமாக
வீட்டுக் கடன் பெற விரும்புவோர் வீட்டுக் கடன் என்பதை தேர்வு செய்ய வேண்டும்.
வீட்டுக் கடன் என்பது தேர்வு செய்தவுடன் அது பற்றிய விபரங்கள் அந்த செயலில் தோன்றும் அதாவது மாவட்டம் வட்டம் சங்கம் மற்றும் வங்கி விவரங்கள் தனிநபர்கள் பற்றிய விவரங்கள் முகவரி பழைய கடன் விவரங்கள் போன்றவை அதில் பதிவு செய்து வீட்டு கடனுக்கு நீங்கள் விண்ணப்பிக்கலாம்
கருத்துரையிடுக