துறையின் பெயர்.
இந்து சமய அறநிலையத்துறை
இடம்
ஈரோடு
பணியின் பெயர்
மாவட்ட அறங்காவலர் குழு
ஈரோடு மாவட்டம், இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள ரூ.10 இலட்சத்திற்கு மிகாமல் ஆண்டு வருமானம் பெறும் சட்டப்பிரிவு 46 (1), 46 (2), மற்றும் 49 (1) உள்ள திருக்கோயில்களுக்கு பரம்பரை வழிமுறை சாரா அறங்காவலர்கள் நியமனம் செய்திட ஈரோடு மாவட்ட அறங்காவலர் நியமனக்குழு அரசால் நியமனம் செய்யப்பட வேண்டி உள்ளது. மேற்படி மாவட்டக் குழுவில் உறுப்பினர்கள் நியமித்திட இந்திய நாட்டின் குடிமகனாக உள்ள இந்து சமயத்தை சார்ந்த 25 வயது பூர்த்தியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள்வரவேற்கப்படுகிறது. மேற்படி விண்ணப்பதாரர்கள் இந்து சமய அறநிலையத்துறை சட்டப்பிரிவு 7A, 25A, 26, 47 மற்றும் 49-ன் படி தகுதிகள் உடையவராக இருக்க வேண்டும். அவ்விண்ணப்பங்கள் நிர்ணயிக்கப்பட்ட படிவத்தில்
இவ்வறிவிப்பு வெளியிடப்பட்ட நாளிலிருந்து 09.08.2024 அன்றோ அல்லது அதற்கு முன்னதாகவோ
உதவி ஆணையர் அலுவலகம்,
இந்து சமய அறநிலையத்துறை, முன்னாள் படைவீரர் மாளிகை,
காந்திஜி ரோடு, ஈரோடு
என்ற முகவரியில் இயங்கி வரும் இந்து சமய அறநிலையத்துறை, உதவி ஆணையர் அலுவலகத்திற்கு வந்து சேர வேண்டும்.
நிர்ணயிக்கப்பட்டுள்ள, தகுதிகள், பிற விவரங்கள், நியமனம் பெறுவதற்கான படிவம் ஆகியவற்றை ஈரோடு உதவி ஆணையர் அலுவலகம் மற்றும்
ஈரோடு, பெருந்துறை, பவானி,கோபிசெட்டிபாளையம், மொடக்குறிச்சி,அந்தியூர், சத்தியமங்கலம் ஆய்வர்கள் அலுவலகங்களில் அலுவலக நாட்களில் அலுவலக நேரத்தில் பெற்றுக் கொள்ளலாம் என இதன் மூலம் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.
முழு விவரங்கள் அறிய: இங்கே கிளிக் செய்யவும்
கருத்துரையிடுக