தமிழகத்தில் உள்ள ஆதிதிராவிடர் நலப்பள்ளிகளில் – ஆசிரியர் பணி - உடனே விண்ணப்பிக்கவும் – விண்ணப்பிக்க கடைசி நாள் -08.07.2024

 


கோப்பு  எண் மற்றும் வெளியீடு நாள்.  செ.வெ.எண்: 10, நாள்: 06.07.2024

துறையின்  பெயர்.

ஆதிதிராவிடர் நலப்பள்ளி

பணியிடம்.

சிவகங்கை மாவட்டம்


 ஆதிதிராவிடர் நலப்பள்ளிகளில் உள்ள பட்டதாரி ஆசிரியர் இடைநிலை ஆசிரியர். காலிப் பணியிடங்கள், தற்காலிகமாக தொகுப்பூதியத்தில் நிறப்பப்படவுள்ளது. தகுதியுடையோர் உரிய ஆவணங்களுடன் வருகின்ற  08.072024-குள் விண்ணப்பித்தல் வேண்டும்-

சிவகங்கை மாவட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் இயங்கிவரும் ஆதிதிராவிடர் நலப்பள்ளிகளில் உள்ள பட்டதாரிஆசிரியர் / இடைநிலை ஆசிரியர் காலிப்பணியிடங்களை தொகுப்பூதியத்தில் நியமனம் செய்ய மாணாக்கர்கள் நலன் கருதி தற்காலிகமாக ஆணை வெளியிடப்பட்டுள்ளது.

 

அதன் படி சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அதிகரம் ஆதிதிராவிடர் உயர்நிலைப்பள்ளியில் காலியாக உள்ள 1(ஒன்று) அறிவியல் பட்டதாரி ஆசிரியர் பணியிடம் மற்றும் உஞ்சனை ஆதிதிராவிடர் நலத் தொடக்கப்பள்ளியில் காலியாகஉள்ள 1(ஒன்று) இடைநிலை ஆசிரியர் பணியிடம் நிரப்பப்பட உள்ளது.

பள்ளி மேலாண்மைக்குழு மூலம் நிரப்பப்படும் பட்டதாரிஆசிரியர் மற்றும் இடைநிலை ஆசிரியர் பணியிடத்திற்கான கல்வித்தகுதி ஆசிரியர்களுக்கான தற்போதைய அரசு நடைமுறையில் உள்ள விதிமுறைகளை பின்பற்றி அதன்படி வரையறுக்கப்பட்ட கல்வித்தகுதியை பெற்றிருக்க   வேண்டும். 

தகுதி .

பட்டதாரி ஆசிரியர்.

ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் (பட்டதாரி ஆசிரியர் பணியிடத்திற்கு ஆசிரியர் தகுதித்தேர்வு ( TET PAPER II)

இடைநிலை ஆசிரியர்

 இடைநிலை ஆசிரியர் பணியிடத்திற்கு ஆசிரியர் தகுதித்தேர்வு (TET PAPER II) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்) இல்லம் தேடிகல்வித் திட்டத்தில் தன்னார்வளர்களாக இருப்பவர்கள், வரையறுக்கப்பட்ட கல்வித்தகுதியுடன் ஆசிரியர் தகுதித்தேர்வில் நேர்ச்சி பெற்றவர்கள் மற்றும் பட்டியலினத்தவருக்கும் அமைந்துள்ளபகுதி மற்றும் அதன் அருகில் உள்ளவர்களுக்கும் அளிக்கப்படும்.


ஊதிய முறை

தொகுப்பூதிய முறை

 

ஊதியம்

இடைநிலை ஆசிரியருக்கு ரூ.12,000/-

பட்டதாரி ஆசிரியருக்கு ரூ.15,000/-


 விண்ணப்பிக்க விரும்புவோர் சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில் விண்ணப்பத்தினை உரிய கல்வித்தகுதி சான்றுகளுடன் 08.07.2024 மாலை 05:45 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.


அதிகாரப்பூர்வ இணையதளம் செல்ல

இங்கே கிளிக் செய்யவும் 

அதிகாரப்பூர்வ அறிவிப்பு/ விண்ணப்பம்

பதிவிறக்கம்

செய்ய

இங்கே கிளிக் செய்யவும் 


Post a Comment

புதியது பழையவை
இன்றைய கார்மெண்ட்ஸ் வேலைவாய்ப்புகள் Click here
இன்றைய தனியார் வேலைவாய்ப்புகள் Click here
இன்றைய அரசு வேலைவாய்ப்புகள் Click here