மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு, ஒருங்கிணைந்த மாவட்ட நீதிமன்ற வளாகம், திருச்சிராப்பள்ளி வேலைவாய்ப்பு 2024

 


திருச்சிராப்பள்ளி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு மற்றும் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் இயங்கி வரும் லால்குடி, மணப்பாறை, துறையூர் முசிறி, ஸ்ரீரங்கம், தொட்டியம் ஆகிய வட்ட சட்டப்பணிகள் குழுவிற்கு சட்ட உதவி மற்றும் சட்ட அறிவை பாமர மக்களுக்கு எடுத்துரைப்பதற்காக மொத்தம் 50 "சட்டம் சார்ந்த தன்னார்வ தொண்டர்கள் (Para Legal Volunteers)" தேர்ந்தெடுக்கப்பட உள்ளார்கள். மேற்படி இப்பணி சட்ட தன்னார்வர்களுக்கான கடமை மற்றும் சேவை மட்டுமே. இது நிரந்தர பணிக்கானது அல்ல, முற்றிலும் தற்காலிகமானது மற்றும் அதற்கு அடிப்படை சம்பளம் அல்லது ஊதியம் எதுவும் இல்லை, சேவைக்கு தகுந்த மதிப்பூதியம் மட்டும் அளிக்கப்படும் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்.


மேலும், திருச்சிராப்பள்ளி மாவட்டத்தை சேர்ந்த சட்டம் சார்ந்த தன்னார்வ தொண்டர்களுக்கு வரவேற்கப்படுகின்றன.


கீழ்கண்ட பிரிவினர்களிடமிருந்து விண்ணப்பங்கள்


1. ஆசிரியர்கள் (ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் உட்பட)

2. ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள் மற்றும் மூத்த குடிமக்கள்

3.MSW பயிலும் மாணவர்கள் மற்றும் பயிற்றுவிக்கும் ஆசிரியர்கள்

4. அங்கன்வாடி பணியாளர்கள்

5.மருத்துவர்கள்

6. சட்டக்கல்லூரி மாணவர்கள் (வழக்கறிஞர்களாக பதிவு செய்யும் வரை) 

7. சமூக சேவை செய்யும் சமூக ஆர்வலர்கள் (அரசியல் கட்சி சாரா தன்னார்வ தொண்டு நிறுவனத்தை சார்ந்தவர்கள்)

8. மகளிர் சுய உதவிக்குழுக்கள் மற்றும் சமூக தொண்டு புரியும் மகளிர் குழுக்கள்

9. திருநங்கைகள்

10. அடிப்படை கல்வி தகுதி (கணினி அறிவுடன்) உடைய சேவை மனப்பாண்மை உள்ளவர்கள்

11. மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு மற்றும் வட்ட சட்டப்பணிகள் குழுவில் பணிபுரிகின்ற தன்னார்வ சட்டப்பணியாளர்கள் பணிக்கு பொருத்தமாக கருதும் நபர்


விண்ணப்பிக்க கடைசி நாள்:

10.07.2024

 

 நிபந்தனைகள் நன்கு படித்து பின்பு விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து அனுப்பவும்.

 

அதிகாரப்பூர்வ இணையதளம் செல்ல

இங்கே கிளிக் செய்யவும் 

அதிகாரப்பூர்வ அறிவிப்பு/ விண்ணப்பம்

பதிவிறக்கம்

செய்ய

இங்கே கிளிக் செய்யவும் 


Post a Comment

புதியது பழையவை

TELEGRAM ALERT