இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மண்டல அலுவலகம், கோவை நகை மதிப்பீட்டாளர்கள் வேலைவாய்ப்பு 2024

 


இந்தியன் ஓவர்சீஸ் வங்கி
மண்டல அலுவலகம், கோவை

நகை மதிப்பீட்டாளர்கள் தேவை

எங்களது வங்கியின் கோயம்புத்தூர் மண்டல கிளைகளில் நகை மதிப்பீட்டாளராக கமிஷன் அடிப்படையில் செயல்பட நன்கு அனுபவம் வாய்ந்த /நன்கு கற்று தேர்ந்த கோயம்புத்தூர், திருப்பூர் மற்றும் நீலகிரி மாவட்டங்களைச் சேர்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. 

விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள், தங்களது சுயகுறிப்பு, பாஸ்போர்ட் அளவு புகைப்படம், முன் அனுபவச் சான்று, சாதிச் சான்று, கல்வித்தகுதி, முகவரி மற்றும் அடையாள சான்றுகளுடன் இரண்டு நபர்களிடமிருந்து நன்மதிப்புச் சான்றிதழ் மற்றும் சமீபத்திய காவல்துறை சரிபார்ப்பு சான்றிதழ் ஆகியவற்றை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும். 

*அனைத்து ஆவணங்களிலும் கையெழுத்து இருத்தல் வேண்டும். கையெழுத்து இல்லாமல் வரும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும். 

உரையின் மேல் முகப்பில் “நகை மதிப்பீட்டாளர் விண்ணப்பம்" என எழுதி அனுப்பவும் 

வயது வரம்பு: 25 முதல் 65 வரை 

தகுதி : குறைந்தபட்சம் 8ம் வகுப்பு 

பிணைத்தொகை: ரூ.35,000 முதல் 60,000 வரை 

முன் அனுபவம் : குறைந்தபட்சம் 5 வருடம் 

பயிற்சி சான்று : பொற்கொல்லர் குடும்பத்தை
சேராதவர்களுக்கு கட்டாயம்

பணியிடம்: கோயம்புத்தூர், திருப்பூர் மற்றும்
நீலகிரி மாவட்டங்களில் உள்ள வங்கியின் கிளைகள்

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி : 
முதன்மை மண்டல மேலாளர், இந்தியன் ஓவர்சீஸ் வங்கி
விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி தேதி 15.07.2024
11/952, கிராஸ் கட் ரோடு, காந்திபுரம், கோயம்புத்தூர் - 641012. 

 மின்னஞ்சல் : 0807agri@iob.in

விண்ணப்பங்கள் வந்துசேர வேண்டிய கடைசி நாள் : 15.07.2024

முழு விவரங்கள் அறிய: இங்கே கிளிக் செய்யவும்

Post a Comment

புதியது பழையவை

TELEGRAM ALERT