தமிழ்நாடு அரசு மாவட்ட சுகாதார சங்கம், தேசிய காசநோய் ஒழிப்புத்திட்டம். மாவட்ட காசநோய் மையம், விருதுநகர் வேலைவாய்ப்பு 2024

 


கீழ்க்காணும் 11 மாத ஒப்பந்த அடிப்படையிலான (இனசுழற்சி முறை) தற்காலிக பணியிடங்களுக்கு உரிய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

நிறுவனத்தின்பெயர்:  

தமிழ்நாடு அரசு

மாவட்ட சுகாதார சங்கம்,

தேசிய காசநோய் ஒழிப்புத்திட்டம்.

மாவட்ட காசநோய் மையம், விருதுநகர்


முதுநிலை சிகிச்சை மேற்பார்வையாளர் (STS) Senior Treatment Supervisor 
காலிப்பணியிடம்- 1

முதநிலை சிகிச்சை ஆய்வக மேற்பார்வையாளர் (STLS) Senior Treatment Laboratory Supervisor 
காலிப்பணியிடம்-1

காசநோய் ஆய்வக
| நுட்புனர் / நுண்னோக்கி சளிபரிசோதகர்
(TB Laboratory Technician) 
காலிப்பணியிடம் - 3

அடிப்படை தகுதி:
முதுநிலை சிகிச்சை மேற்பார்வையாளர் (STS) : 
1. இளங்கலைபட்டப்படிப்பு அல்லது அங்கீகரிக்கப்பட்ட சுகாதார ஆய்வாளர் படிப்பு | 2. கணிணி படிப்புக்கான சான்றிதழ்
3. இருசக்கர மோட்டார் வாகனம் ஓட்டதெரிந்து அதற்கான நிரந்திர ஓட்டுனர் உரிமம் பெற்றிருத்தல் வேண்டும்

முதநிலை சிகிச்சை ஆய்வக மேற்பார்வையாளர் (STLS)  :
1.+2வில் அறிவியல் மற்றும் மருத்துவ ஆய்வுக்கூட நுட்புநர் படிப்பு அல்லது சான்றிதழ்
2. ஆய்வுக்கூடத்தில் குறைந்தது இரண்டுவருட முன் அனுபவம் பெற்றிருத்தல் வேண்டும்
3. இருசக்கரவாகன ஓட்டுநர் உரிமம் பெற்றிருத்தல் வேண்டும்.

காசநோய் ஆய்வக| நுட்புனர் / நுண்னோக்கி சளிபரிசோதகர்: 
1. மேல்நிலைக் கல்வி தேர்ச்சி மற்றும்
2. மருத்துவ ஆய்வக நுட்புனர்க்கான சான்றிதழ் அல்லது பட்டயப்படிப்பு தேர்ச்சி அல்லது அதற்கு இணையான படிப்பு


விண்ணப்பத்தாரர்கள் தங்கள் தகுதிக்கானசான்றிதழ்கள் மற்றும் இருசக்கரவாகன ஒட்டுநருக்கான நிரந்தர உரிமம் ஆகியவற்றின் சான்றொப்பமிட்டநகல் (Attested Xerox copy) மற்றும ரூ. 5 க்கான அஞ்சல் வில்லை ஒட்டிய சுயவிலாச மிட்ட உறையுடன் இணைத்து விண்ணப்பிக்கவும். 

விண்ணப்பங்கள் அனுப்பப்படும் உறையின் மேல் பதவியின் பெயரைக் குறிப்பிட்டு ”ஒப்பந்த அடிப்படை பணியிடத்திற்கான விண்ணப்பம்”என்று குறிப்பிடப்பட வேண்டும். 

மாநில சுகாதாரச் சங்கம் - NTEPன் வழிகாட்டுதல் படிதொகுப்பூதியம் வழங்கப்படும். 

விருதுநகர் மாவட்டத்தைச் சார்ந்தவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். 

தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் தங்கள் சொந்தசெலவில் தேர்வு / நேர்காணலுக்கு அழைக்கப்படுவார்கள். 

விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசிநாள் 02.07.2024 மாலை 5.00 மணிக்குள்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி :
தேர்வுக் குழு,
துணை இயக்குநர் மருத்துவபணிகள் (காசநோய்) சமுதாய கூடம், F.F.ரோடு,மணிநகரம், 
மாவட்ட காசநோய் மையம், விருதுநகர்


அதிகாரப்பூர்வ அறிவிப்பு

பதிவிறக்கம்

செய்ய


இங்கே கிளிக் செய்யவும் 


Post a Comment

புதியது பழையவை

TELEGRAM ALERT