ஓவியம்
மற்றும்
சிற்பக்கலையில்
சாதனை
படைத்த, 18
கலைஞர்களுக்கு,
தமிழக
அரசின்
கலைச்செம்மல்
விருதுகள்
அறிவிப்பு!!
தமிழக அரசின் மூலம் ஒவியம் மற்றும் சிற்பக்கலைகளில் சாதனை படைக்கும்
கலைஞர்களுக்கு கலைச்செம்மல் விருதுகள் ஒவ்வொரு வருடமும் வழங்கப்பட்டு
வருகிறது. தமிழக அரசு கலை பண்பாட்டுத் துறையின் மூலம் ஆண்டுக்கு ஆறு கலைஞர்களுக்கு ஓவிய நுண்கலை குழு வழியாக, , கலைச்செம்மல் விருதுக்கான பரிசுத்தொகை தலா 1 லட்சம் ரூபாய்
வழங்கப்பட்டு வருகிறது. இவ்விருதுக்கான கலைஞர்களை தேர்வு செய்ய, தேர்வாளர்கூட்டம், கலைபண்பாட்டுத்துறை இயக்குனர் காந்தி தலைமையில் நடந்தது. இக்கூட்டத்தில், 2021 - 24 ஆகிய மூன்று ஆண்டுகளுக்கும் சேர்த்து
18 கலைஞர்களை தேர்வு செய்தனர். நவீன ஓவியம் மற்றும் சிற்பம் பிரிவில் விஸ்வம், சுப்பிரமணியம், பிரபுராம், அருணகிரி, புகழேந்தி, அதிவீரராம பாண்டியன் மற்றும் நவீன சிற்பம் பிரிவில் கருணாமூர்த்தி, விஜயவேலு, ஹேமலதா மரபுவழி ஓவியத்திற்காக ஓவியர் வாசுகி லட்சுமி நாராயணன், ராமு என்கிற ராமதாஸ் என்பவருக்கும், மணியம் செல்வன், ராஜமோகன், வாசுகி லட்சுமி நாராயணன், வேல்முருகன் மற்றும் மரபுவழி சிற்பம் பிரிவுகளில், செல்வநாதன், ராஜேந்திரன், உலோக சிற்பக்கலைஞர் ரவீந்திரன், மர சிற்பக்கலைஞர் பால்ராஜ் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். சர்வதேச அமைப்பான யுனெஸ்கோ, சென்னையின் பாரம்பரியமிக்க செவ்வியல் இசையின் சிறப்புகளுக்கு, பெருமை சேர்க்கும் வகையில், இசை நகரமாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
கருத்துரையிடுக