தமிழ்நாட்டில் இனி நிலங்களை அளக்க இணையவழியில் விண்ணப்பிக்கலாம்

 

🟪 நில உரிமையாளர்கள் இனி வட்ட அலுவலகங்களுக்கு நேரில் செல்லாமல் தங்கள் நிலங்களை அளவிட செய்ய https://tamilnilam.tn.gov.in/citizen இணையதளம் மூலம் விண்ணப்பிக்கும் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.


🟪இந்த இணையதள சேவையின் மூலம் பொதுமக்கள் எந்த இடத்தில் இருந்தும் எந்த நேரத்திலும் இணைய வழியிலேயே கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது


🟪இதன் மூலம் நில அளவை செய்யப்படும் நாள் மனுதாரருக்கு எஸ்எம்எஸ் அல்லது போன் மூலம் தெரிவிக்கப்படும்.

 மேலும் நில அளவை செய்யப்பட்ட பின்பு மனுதாரர் மற்றும் நில அளவர் கையொப்பமிட்ட அறிக்கை வரைபடம் ஆகியவற்றை மனுதாரர்  https://eservices.tn.gov.in/ என்ற இணையதளத்தின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளும் வகையில் நில அளவரால் பதிவேற்றம் செய்யப்படுகிறது


எனவே தமிழ்நாட்டில் உள்ள மக்கள் இனிமேல் தங்கள் நிலங்களை இணைய வழியில் விண்ணப்பித்து அளக்க கூறலாம். இந்த செய்தி மற்ற நண்பர்களுக்கும் பகிர்ந்து உதவுங்கள்


Post a Comment

புதியது பழையவை

TELEGRAM ALERT