பழநியில் 14 ஆம் நூற்றாண்டு சேர்ந்த ஆயிர வைசிய சமூகத்தின் செப்பேடு கண்டுபிடிப்பு!!!

 

பழநியில் 14 ஆம் நூற்றாண்டு சேர்ந்த ஆயிர வைசிய சமூகத்தின் செப்பேடு கண்டுபிடிப்பு!!!

பழநியில் 14 ஆம் நூற்றாண்டு சேர்ந்த ஆயிர வைசிய சமூகத்தின் செப்பேடு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பழநியில் ஆயிரம் வைசிய சமூகத்தின் செப்பேடு கண்டறியப்பட்டது. பழநி திருமஞ்சன பண்டாரம் சண்முகம் முன்னோர்கள் பாதுகாத்து வைத்திருந்தனர். இது குறித்து அறிய தொல்லியல் ஆய்வாளரான திரு.நாராயணமூர்த்தி அவர்களிடம் வழங்கினர். செப்பேட்டு மூன்று கிலோ எடை, 49 செ.மீ., உயரம், 30 செ.மீ., அகலம் இருந்தது. பட்டயத்தின் இருபுறமும் எழுதப்பட்டுள்ளது.

இது ஆயிர வைசியர் சமூகத்தினர் பழநி மலை முருகனுக்கு திருமஞ்சன வில்வார்ச்சனை, தினசரி பூஜை செய்ய வேண்டி பழநியில் வசிக்கும் செவ்வந்தி பண்டாரத்திற்கு ஏற்படுத்திக் கொடுத்த திருமஞ்சன கட்டளையை கூறுகிறது. இச்சேப்பேடு கி.பி., 1363 இல் சோப கிருது ஆண்டு, தை மாதம் 25ஆம் தேதி வியாழக்கிழமை, தைப்பூச நாளில் பெரியநாயகி அம்மன் சன்னதி முன்பாக எழுதி வெளியிடப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் 518 பேர் கையொப்பம் பெற்றுள்ளனர். செப்பு பட்டையின் முகப்பில் விநாயகர், கைலாசநாதர், முருகன், பெரியநாயகி அம்மன், செவ்வந்தி பண்டாரம், ஆயிர வைசியரின் சின்னமான செக்கு, உருவமாக வரையப்பட்டுள்ளது. இதில் வையம் நீடுக மாமழை மண்ணுக என்ற பாடல் வரியுடன் துவங்கி முருக பெருமானின் புகழ், ஐந்து பாடல்கள் பாடப்பட்டு உள்ளது.

மேலும் அறிய www.sethikadal.com என்ற இணைதளத்தை பார்க்கவும்

Post a Comment

புதியது பழையவை

TELEGRAM ALERT