தமிழக அரசின் இலவச தையல் இயந்திரம் மற்றும் இலவச சலவைப்பெட்டி பெறுவதற்கான வழிமுறைகள்

தமிழக அரசின் இலவச தையல் இயந்திரம் மற்றும் இலவச சலவைப்பெட்டி பெறுவதற்கான வழிமுறைகள்

   

தமிழக அரசின் விலையில்லா சலவைப்பெட்டி பெறுவதற்கான வழிமுறைகள் பற்றியும்,தகுதிகள், வயது வரம்பு மற்றும் எந்த எந்த வகுப்பினர் பெறலாம் என்றும் கீழ்க்கண்டவாறு இலவச சலவைபெட்டி மற்றும் தையல் இயந்திரம் பற்றி விரிவாக காண்போம்.

 

பிற்படுத்தப்பட்டோர் , மிகவும் பிற்படுத்தப்பட்டோர்  மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை மற்றும் ஆதிதிராவிடார் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் மூலம் இலவச தையல் இயந்திரம் மற்றும் இலவச சலவைபெட்டியை பெறலாம்.

 

இலவச தையல் இயந்திரம் மற்றும் இலவச சலவைப்பெட்டி பெறுவதற்கான தகுதிகள்

 

இலவச தையல் இயந்திரம்1.       பிற்படுத்தப்பட்டோர் , மிகவும் பிற்படுத்தப்பட்டோர்  மற்றும்  சிறுபான்மையினர்   ஆதிதிராவிடார் மற்றும் பழங்குடியினர்           வகுப்பினராக இருக்க வேண்டும். அந்த வகுப்பின் சாதிசான்றிதழை யார் பெயரில் தையல் இயந்திரம்  வாங்க மனு செய்கிறார்களோ அவர்கள் பெயரில் இருக்க வேண்டும்.

      2.   வருமான சான்றிதழ் ரூ.72,000ஃ-க்குள் இருக்க வேண்டும்.

      3.   தையல் பயிற்சி 1 வருடம் அல்லது 6 மாதம் முடித்த  

        தையல்பயிற்சி  சான்றிதழ்  இருக்க வேண்டும்.

      4.   வயது 48-க்குள் இருக்க வேண்டும்.

      5.   இரண்டு பாஸ்போட் சைஸ்போட்டோ

 

இலவச சலவை பெட்டி தகுதிகள்1.    பிற்படுத்தப்பட்டோர் , மிகவும் பிற்படுத்தப்பட்டோர்  மற்றும் சிறுபான்மையினர்   ஆதிதிராவிடார் மற்றும் பழங்குடியினர்           வகுப்பினராக இருக்க வேண்டும். அந்த வகுப்பின் சாதிசான்றிதழை யார் பெயரில் சலவைபெட்டி  வாங்க மனு செய்கிறார்களோ அவர்கள் பெயரில் இருக்க வேண்டும்.

 2.   வருமான சான்றிதழ் ரூ.72,000ஃ-க்குள் இருக்க வேண்டும்.

 3.   வண்ணார் தொழில் செய்கிறார் என்றும் கிராம நிர்வாக     அலுவலரிடமிருந்து ஒரு சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். 

 4.   இரண்டு பாஸ்போட் சைஸ்போட்டோ

 

 

இலவச தையல்இயந்திரம் மற்றும் இலவச சலவைப்பெட்டி பெறுவதற்கான வழிமுறைகள்.

1.   மாவட்ட கலெக்டர்  அலுவலக வளாகத்தில் பிற்படுத்தப்பட்டோர் , மிகவும் பிற்படுத்தப்பட்டோர்  மற்றும் சிறுபான்மையினர்   ஆதிதிராவிடார் மற்றும் பழங்குடியினர் ஆகிய துறைக்களுக்கான அலுவலகம் செயல்பட்டுக்கொண்டு இருக்கிறது.

 .  அந்த அந்த துறை அலுவலகத்திற்கு  சென்று மேற்குறிப்பிட்ட   

    சான்றுகளுடன் ஒரு கோரிக்கை மனுவை ஒரு வெள்ளைதாளில்  

    எழுதி  அத்துடன் இணைத்துக்கொடுக்க வேண்டும்.

 

   3.  நீங்கள் தகுதியுடையவர்களாக இருந்தால் உங்களுக்கு இலவச            தையல் இயந்திரம் மற்றும் இலவச சலவைபெட்டி வழங்க                  நடவடிக்கை  மேற்கொள்ளப்படும்.

     

 


தற்போது உங்கள் தொகுதயில் முதலமைச்சர்  பிரிவின் மூலம் மனு செய்தாலும் இலவச சலவைபெட்டி மற்றும் இலவச தையல் இயந்திரம் வழங்க உடனடியாக நடவடிக்கை  எடுக்கப்படுகிறது. 

Post a Comment

புதியது பழையவை

TELEGRAM ALERT