முதலமைச்சாின் மருத்துவ காப்பீட்டு அட்டையை Apply முதல் card பெரும் வரை விவரங்கள் அறிய

 


 தமிழக முதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டுத் அட்டையை பெற்றுவதற்கான வழிமுறைகள் பற்றி தெரிந்துக்கொள்ள

தமிழ்நாடு முதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டுத் அட்டையை பெற்றுவதற்கான வழிமுறைகள்

தமிழக முதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டுத்திட்டத்தில்  தமிழ்நாட்டில் உள்ள ஏழை  மக்களுக்கு பயன் பெறும் வகையில் உருவாக்கப்பட்ட முக்கிய திட்டமாகும். உயிருக்கு ஆபத்தான முக்கிய (51) நோய்களுக்கான சிகிச்சைகள் இத்திட்டத்தில் மூலம் மக்களுக்கு வழங்கப்படுகிறது. ரூ.5,00,000 வரையிலான உயர்ந்த மருத்துவ அறுவை சிகிச்சைகளை அரசு மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனைகளில் இலவசமாக செய்யப்படுகின்ற ஒரு சிறந்த மருத்துவ காப்பீட்டு திட்டம் ஆகும்.

 

v  இத்திட்டத்தில்  எந்த நோய்களுக்கு நாம் சிகிச்சை பெற முடியும்?

v  முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டம் அட்டையை நாம் எவ்வாறு பெற முடியும்?

v  முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டம் அட்டையை பெறுவதற்கான வழிமுறைகள்.

v  அதற்கான என்னென ஆவணங்கள் தேவை?

v  முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டம் அட்டையை பெற தகுதி?

ஆகிவற்றை கீழே அதற்கான வழிமுறைகளை காணலாம்.

 

முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டம் அட்டையை பெற தகுதிகள் எவை?

1.   இந்திய குடிமகனாக இருக்க வேண்டும்.

2.   குடும்ப ஆண்டு வருமானம் ரூ.72,000  இருக்க வேண்டும்.

3.   குடும்ப அட்டை மற்றும் வருமானம் சான்று பெற்று இருக்க வேண்டும்

 

4.   குடும்ப அட்டை குழந்தைகள், பெற்றோர்களின் பெயர்கள் இடம் பெறு இருக்க வேண்டும்.

 

5.       மாநிலங்களிலிருந்து தமிழகத்திற்கு புலம் பெயர்ந்தவர்கள் ஆறு மாதத்திற்க்கு அதிகமாக தங்கி இருப்பவர்கள் இந்த திட்டத்தில் இணைய தமிழ்நாடு தொழில் துறையிலிருந்து சான்று பெற்று பயனடையலாம்

 

 

6.   முகாம்களில் உள்ள இலங்கை அகதிகள், முகாம்களில் தங்கி இருப்பதற்க்கான சான்று  மட்டும் இணைத்து மற்றும் வருமான சான்று இல்லாமல் சேரலாம்.

 

 


முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டம் அட்டையை பெறுவதற்கான வழிமுறைகள்.

1.குடும்ப அட்டையுடன் கிராம நிர்வாக அலுவலரிடம் பெற்ற சான்று பெற வேண்டும்.

2.குடும்ப அட்டை நகல் மற்றும் கிராம நிர்வாக அலுவலரிடம் பெற்ற சான்று நகல் ஆகியவற்றை குடும்ப தலைவர்  மாவட்ட ஆட்சியரகத்தில்  உள்ள அட்டை வழங்கும் மையத்திற்கு  எடுத்து செல்ல வேண்டும்.

3.அட்டை வழங்கும் அலுவலர் தாங்கள் கொடுக்கும் ஆவணங்களை சரிப்பார்பார்.

4. சுயவிவரங்கள் மற்றும் கைரேகை ஆகியவற்றை பதிவு செய்து இத்திட்டதில் தங்களது பெயரை சேர்ப்பார்.

5.புகைபடத்தை எடுத்த பின்பு முதலமைச்சரின் மருத்துவ காப்பீடு அட்டை சில நாட்களுக்குள்   இ-கார்டு பயனாளிக்கு கொடுக்கப்படும்.

 

முதலமைச்சரின் மருத்துவ காப்பீடு திட்டத்தில் நோய்களுக்கான சிகிச்சைகள்  மற்றும் அறுவை சிகிச்சைகள் பற்றிய தொகுப்பு


முதலைமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டத்தில் பதிவு செய்யும் முறை தமிழக அரசால் வெளியிடப்பட்டுள்ள PDF  - Click Here

 

முதலைமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டத்தில் சிகிச்சை செய்யப்படும் மருத்துவ நோய்களின் பட்டியல் அதன் செலவுக்கான தொகுப்பு

தமிழக அரசால் வெளியிடப்பட்டுள்ள PDF  - Click Here

 

 

மருத்துவகாப்பீடு அட்டையை தங்களது ஆதார்எண்ணனுடன் இணைக்கும் தொகுப்பு தமிழக அரசால் வெளியிடப்பட்டுள்ள PDF  - Click Here

 

 

Helpline No.

சி.எம்.சி.எஸ்.டி.என் திட்ட அலுவலகத்தில் கட்டணமில்லா 24 மணி நேர கால் சென்டர் அமைக்கப்பட்டுள்ளது.

கட்டணமில்லா எண் 1800 425 3993.

மேலும் முதலமைச்சரின் காப்பீட்டு திட்டத்தை பற்றி அறி

Click Here  https://www.cmchistn.com/index.php#awardsFor more Important news  pls visit 

our website: www.seithikadal.com


The Seithikadal Instant News chennal :Fast. Simply. Accuracy. JOIN Telegram!


https://t.me/Seithikadal
Post a Comment

புதியது பழையவை

TELEGRAM ALERT