தமிழ்நாடுஅரசு
செய்தி மக்கள் தொடர்புத் துறை, சென்னை
அறிவிப்புகள்
செய்தி மக்கள் தொடர்புத் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் சென்னை இராஜாஜி மண்டபம் மற்றும் காந்தி மண்டபத்தில் காலியாக உள்ள 7 (ஏழு) எண்ணிக்கையிலான நூலகர் மற்றும் காப்பாளர் (Librarian cum Caretaker) பணியிடங்களை நிரப்ப இணை இயக்குநர் (நினைவகங்கள்) அவர்களால் தகுதியான நபர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியிடம் தொடர்பான விவரம் கீழ்க்கண்டவாறு:-
பணியிடங்களின் பெயர் :நூலகர் மற்றும் காப்பாளர் (Librarian cum Caretaker)-7 பணியிடங்கள்
பணியிடத்தின் ஊதிய விகிதம்: PB1A ரூ.2500-ரூ.5000 மற்றும் தர ஊதியம் ரூ.500/-
நிரப்பப்படவுள்ள பணியிடங்களின் எண்ணிக்கை : 7(ஏழு)
இனசுழற்சி முறை: 1. தியாகிகள் மணிமண்டபம், கிண்டி, சென்னை- பொதுப்போட்டி (முன்னுரிமையற்றவர்).
2. பெரியவர் எம்.பக்தவச்சலம் நினைவிடம், கிண்டி, சென்னை பொதுப்போட்டி (முன்னுரிமையற்றவர்).
3. இரட்டைமலை சீனிவாசன் நினைவகம், கிண்டி, சென்னை *ஆதிதிராவிடர் (முன்னுரிமையற்றவர்).
4. மூதறிஞர் இராஜாஜி நினைவாலயம், கிண்டி, சென்னை மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் (முன்னுரிமையற்றவர்).
5. கண்ணியத்திற்குரிய காயிதேமில்லத் மணிமண்டபம், காயிதேமில்லத் அரசினர் மகளிர் கல்லூரி அருகில், சென்னை பொதுப்போட்டி (முன்னுரிமையற்றவர்).
6. பெருந்தலைவர் காமராஜர் நினைவகம், கிண்டி, சென்னை ஆதிதிராவிடர் (முன்னுரிமை அடிப்படையில் அருந்ததியினர்) (முன்னுரிமையற்றவர்) (அருந்ததியினர் எவரும் இல்லாதபட்சத்தில் இந்த இடம் ஆதிதிராவிடர் இனத்தைச் சேர்ந்தவர்களுக்கு வழங்கப்படும்).
7. மொழிப்போர் தியாகிகள் மணிமண்டபம் கிண்டி, சென்னை - மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் (முன்னுரிமையற்றவர்)
பணியமர்த்தப்படும் இடம்: 1. தியாகிகள் மணிமண்டபம், கிண்டி, சென்னை.
2. பெரியவர் எம்.பக்தவச்சலம் நினைவிடம். கிண்டி, சென்னை. 3. இரட்டைமலை சீனிவாசன் நினைவகம், கிண்டி, சென்னை.
4. மூதறிஞர் இராஜாஜி நினைவாலயம், கிண்டி, சென்னை.
5. கண்ணியத்திற்குரிய காயிதேமில்லத் மணிமண்டபம், காயிதேமில்லத் அரசினர் மகளிர் கல்லூரி அருகில், சென்னை.
6. பெருந்தலைவர் காமராஜர் நினைவகம், கிண்டி, சென்னை.
7. மொழிப்போர் தியாகிகள் மணிமண்டபம், கிண்டி, சென்னை.
கல்வித் தகுதிகள்:
1. பத்தாம் வகுப்பு (SSLC) தேர்ச்சி.
2. ஏதாவது ஒரு அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் Certificate in Library and Information Science (C.L.I.S.) படிப்பில் சான்றிதழ் பெற்றிருத்தல் வேண்டும்.
வயதுவரம்பு:
01.07.2024 அன்றுள்ளவாறு 18 முதல் 30வயதிற்குள் இருக்க வேண்டும். (அரசு நிர்ணயித்துள்ள வயது தளர்வுகள் பொருந்தும்)
விண்ணப்பங்கள்அனுப்ப வேண்டிய முகவரி:
செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம், இராஜாஜி மண்டபம் மற்றும் காந்தி மண்டபம். சர்தார் வல்லபாய் பட்டேல் ரோடு, கிண்டி, சென்னை-600 022.
விண்ணப்பங்கள்அனுப்ப வேண்டிய கடைசி நாள்:
மனுதாரரின் பெயர், விலாசம், பிறந்த தேதி, கல்வி, அனுபவத் தகுதி மற்றும் பிற விவரங்களுடன் கூடிய முழுமையான விண்ணப்பப் படிவத்தினை கையொப்பமிட்டு சமீபத்தில் எடுக்கப்பட்ட பாஸ்போட் அளவிலான இரு புகைப்படம் மற்றும் சான்றிதழ்களின் நகல்களுடன் 15.11.2024 அன்று மாலை 5.00 மணிக்குள் அனுப்பப்பட வேண்டும்
அதிகாரப்பூர்வ அறிவிப்பு/
விண்ணப்பம் பதிவிறக்கம் செய்ய |
|
கருத்துரையிடுக