KGBV உண்டு உறைவிடப்பள்ளிகளில் பணிபுரிய பெண் ஆசிரியைகள் மட்டும் தேவை
விருதுநகர் மாவட்டம் நரிக்குடி ஒன்றியத்தில் தொண்டு நிறுவனங்கள் மூலம் செயல்பட்டு வரும் 6ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை பெண் குழந்தைகள் மட்டும் பயிலும் கஸ்தூரிபா காந்தி பாலிகா வித்யாலயா உண்டு உறைவிடப்பள்ளிகளில் பட்டியலில் உள்ளவாறு தற்காலிக தொகுப்பூதிய ஆசிரியர் பணியிடங்கள் (இளங்கலைப்பட்டம் மற்றும் B.Ed., பட்டம், TET தகுதி தேர்வில் தேர்ச்சி) காலியாக உள்ளன.
சுழற்சி முறையில் பாட ஆசிரியர்கள் தங்கி பணிபுரிய வேண்டும். கீழ்க்கண்ட பணியிடங்களுக்கு தகுதி வாய்ந்த பெண் பணி நாடுநர்களிடமிருந்து மட்டும் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது
விண்ணப்பதாரர்கள் அனைவரும் KGBV நரிக்குடி அல்லது
KGBV ஆனைக்குளம் உண்டு உறைவிடப்பள்ளிகளில் நேரில் வந்து விண்ணப்பம் பெற்றுக்கொண்டு உரிய சான்றிதழ்களின் நகலுடன் பூர்த்தி செய்து 10.10.2024 அன்று மாலை 5:45 மணிக்குள் விண்ணப்பத்தை சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
செய்தித்தாளில் வெளியான
அறிவிப்பு பதிவிறக்கம் செய்ய |
|
கருத்துரையிடுக