ந.க.எண்.118/செமதொஅ/2024-நாள்.03.10.2024
கன்னியாகுமரி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலகத்தின் கட்டுப்பாட்டிலுள்ள பெருந்தலைவர் காமராஜர் மணி மண்டபத்தில் காலியாக உள்ள நூலகர் மற்றும் காப்பாளர் பணியிடத்தினை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பதவியின் பெயர்
நூலகர் மற்றும் காப்பாளர்
(Librarian Cum Caretaker)
ஊதிய விகிதம்
(Rs.7700-24200,
STC-4)
காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை
1(ஒன்று)
இன சுழற்சி முறை
பிற்படுத்தப்பட்டோர் (BC) (முஸ்ஸீம்கள் தவிர) முன்னுரிமையற்றவர்
பணியமர்த்தப்படும் இடம்
பெருந்தலைவர் காமராஜர் மணி மண்டபம், கன்னியாகுமரி
தகுதிகள்
1. பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
2. ஏதாவது ஒரு பல்கலைக்கழகத்தில் Certificate in Library and Information Science (C.L.I.S) படிப்பில் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு
01.07.2024 அன்றுள்ளவாறு 18 முதல் 34 வயதிற்குட்பட்டவராக இருத்தல் வேண்டும்
அரசாணை (நிலை) எண்:91 மனித வள மேலாண்மைத் (எஸ்)த்துறை நாள் : 13.09.2021-ன் படி வயது உச்ச வரம்பு இரண்டு ஆண்டு உயர்த்தி ஆணை வெளியிடப்பட்டுள்ளது.
விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி மற்றும் கடைசி நாள்
விண்ணப்ப படிவத்தினை https://kanniyakumari.nic.in
இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து,
மனுதாரரின் பெயர்,
முகவரி,
பிறந்ததேதி,
சாதிச்சான்றிதழ்,
கல்வி சான்றிதழ்,
மற்றும் பிற விவரங்களுடன்
கூடிய முழுமையான விண்ணப்பப் படிவத்தினை கையொப்பமிட்டு சமீபத்தில் எடுக்கப்பட்ட பாஸ்போர்ட் அளவிலான இரு புகைப்படங்கள் மற்றும் சான்றிதழ்களின் நகல்களுடன்
செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்,
செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம்,
மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக வளாகம்,
கன்னியாகுமரி மாவட்டம், (இ) நாகர்கோவில்
என்ற முகவரிக்கு
23.10.2024 மாலை 5 மணிக்குள் வந்து சேருமாறு அனுப்ப வேண்டும்.
அதிகாரப்பூர்வ இணையதளம்
செல்ல |
|
அதிகாரப்பூர்வ அறிவிப்பு/
விண்ணப்பம் பதிவிறக்கம் செய்ய |
கருத்துரையிடுக