ஈரோடு மாவட்டம், குற்ற வழக்குத் தொடர்வுத் துறை உதவி இயக்குநர் அலுவலகம் வேலைவாய்ப்பு 2024

 

ஈரோடு மாவட்டம், குற்ற வழக்குத் தொடர்வுத் துறை உதவி இயக்குநர் அலுவலகம்

அலுவலக உதவியாளர் பதவிக்கான விளம்பர அறிவிக்கை அறிவிக்கை எண்: 1/2024 நாள்: 19.09.2024

ஈரோடு மாவட்டம், குற்ற வழக்குத் தொடர்வுத் துறை உதவி இயக்குநர் அலுவலகத்தில் காலியாக உள்ள ஒரு அலுவலக உதவியாளர் பணியிடத்தை நிரப்பும் பொருட்டு தகுதியான நபர்களிடமிருந்து 30.09.2024 மாலை 5.45 மணிவரை விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

01. பதவியின் பெயர் : அலுவலக உதவியாளர்

02 .பணியின் தன்மை : அரசு விதிகளின் படி ஈரோடு மாவட்டம், குற்ற வழக்குத் தொடர்வுத் உதவி இயக்குநர் அலுவலகத்தில் உதவி இயக்குநர் அவர்களுக்கும், அலுவலர்களுக்கு அடிப்படை பணிகளை மேற்கொள்வதில் உதவி செய்தல், அலுவலக நடைமுறைப்| பணிகளில் உதவிடுதல்.

03. ஊதியம் : ரூ.15700-58100 (நிலை 1) என்ற ஊதிய விகிதத்தில் அரசு நிர்ணயம் செய்யும் படிகளுடன்.

04 .குறைந்தபட்ச வயது

01.07.2024 அன்று 18 வயது பூர்த்தியடைந்திருக்க வேண்டும்.

அதிகபட்ச வயது வரம்பு (01.07.2024 அன்றுள்ளவாறு)

பொதுப் பிரிவு (GT)-32 வயது

பிற்படுத்தப்பட்ட வகுப்பு, பிற்படுத்தப்பட்ட வகுப்பு (முஸ்லீம்), மிகவும் பிற்படுத்தப்பட்ட  மற்றும் சீர்மரபினர் (BC, BCM, |MBC & D) -34 வயது

ஆதிதிராவிடர் (SC), பழங்குடியினர் (ST) மற்றும் ஆதரவற்ற விதவை பிரிவில் அனைத்து வகுப்பினர் (DW-All Categories)-37 வயது

06 .காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை : 01 

07 .இட ஒதுக்கீடு: அரசு விதிமுறைகளின் படி நடைமுறைப்படுத்தப்படும்.

08. கல்வித் தகுதி : எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருத்தல்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் அனுப்பப்பட வேண்டிய முகவரி: 

உதவி இயக்குநர், குற்ற வழக்குத் தொடர்வுத் துறை, மாவட்ட ஆட்சியர் வளாகம், 7வது மாடி ஈரோடு மாவட்டம் 638 011.

விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள்: 30.09.2024

 
பணி நியமனம் முற்றிலும் தற்காலிகமானது. மேற்கண்ட நியமனத்திற்கான நேர்காணலை ஒத்திவைக்கவோ, நியமன அறிக்கையை எவ்வித முன்னறிவிப்பும் இன்றி இரத்து செய்யவோ, ஈரோடு மாவட்ட, குற்ற வழக்குத் தொடர்வுத் துறை உதவி இயக்குநர் அவர்களுக்கு முழு அதிகாரம் உள்ளது. மேலும், தேவைப்படின் தேர்வர்களுக்கு எழுத்துத் தேர்வும் நடத்தப்படும் என தெரிவிக்கப்படுகிறது. இத்துடன் தெரிவிக்கப்பட்டுள்ள விண்ணப்பதாரர்களுக்கான அறிவுரைகளை தவறாது பின்பற்றுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

அதிகாரப்பூர்வ இணையதளம் செல்ல

இங்கே கிளிக் செய்யவும் 

அதிகாரப்பூர்வ அறிவிப்பு/ விண்ணப்பம்

பதிவிறக்கம்

செய்ய

இங்கே கிளிக் செய்யவும் 


Post a Comment

புதியது பழையவை

TELEGRAM ALERT