திருநெல்வேலி இளைஞர் நீதிக் குழுமத்தில் (JJB) உதவியாளர் மற்றும் கணினி இயக்குபவர்(Assistant Cum Data Entry Operator) பணியிடமானது ஒரு வருட ஒப்பந்த அடிப்டையில் தட்டச்சு மற்றும் நேர்முகத்தேர்வு மூலமாக தேர்வு செய்வதற்கு தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
காலிபணியிடம்: 1 (ஒன்று)
கல்வித் தகுதிகள்:
12-ம் வகுப்பு தேர்ச்சி, கணினி படிப்பில் டிப்ளமோ / சான்று பெற்றிருக்க வேண்டும். பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
மாதத் தொகுப்பூதியம்; ரூ.11,916/-
இந்த ஒப்பந்த பணியானது முற்றிலும் தற்காலிகமானது. பணியில் சேர்ந்த நாளிலிருந்து ஒருவருடம் வரை நடப்பில் இருக்கும். மாதம் ரூ.11,916/- மட்டும் தொகுப்பூதியம் வழங்கப்படும். வேறு எந்த படியும் பெற தகுதியில்லை. அரசிடமிருந்து ஆணை கிடைக்கப் பெற்ற பின்னரே தொகுப்பூதியம் வழங்கப்படும். ஒரு மாத பணி நாட்கள் முடிவுற்ற பின்னர் ஒரு நாள் தற்செயல் விடுப்பு வழங்கப்படும். வார விடுமுறை ஞாயிறு மட்டும் வழங்கப்படும். ஒப்பந்த அடிப்படையில் நியமனம் செய்யப்படும் இப்பணியாளர், அரசுப்பணி என உரிமை கோர தகுதியில்லை. இந்த ஒப்பந்தமானது எந்தவித முன்னறிவிப்போ, காரணமோ இன்றி எந்த நேரத்திலும் ரத்து செய்யப்படலாம்.
இதற்கான விண்ணப்படிவத்தை https://tirunelveli.nic.in
பெற்றுக் கொள்ளலாம்.
தகுதி வாய்ந்த நபர்கள் மேற்கண்ட பதவிக்கு அதற்கான அமைந்த படிவத்தில் பூர்த்தி செய்து 18.09.2024 அன்றுக்குள்
கீழ்க்கண்ட முகவரியில் கிடைக்கபெறுமாறு விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய அலுவலக முகவரி :
மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலுவலர்,
மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலகு, மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகம், கொக்கிரக்குளம், திருநெல்வேலி -9
✅ அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் பதிவிறக்கம் செய்ய : இங்கே கிளிக் செய்யவும்
கருத்துரையிடுக