புதுக்கோட்டை குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறையில் வேலைவாய்ப்பு 2024

 


தமிழ்நாடு அரசு, குழந்தைகள் நலன் மற்றும் சிறப்புச் சேவைகள் துறை மிசன் வத்சால்யா குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் புதுக்கோட்டை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில் கீழ்கண்ட பட்டியலில் உள்ள காலியிடப்பணியில் தொகுப்பூதியத்தில் பணியாற்றிட புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்தவர்களிடமிருந்து மட்டும் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

பதவியின் பெயர் : 

உதவியாளருடன் இணைந்த கணினி இயக்குபவர் (Assistant Cum Data Entry operator)

பதவியின் எண்ணிக்கை : 01 

ஒப்பந்த ஊதியம் மாதத்திற்கு :  Rs.13,240/-


கல்வி தகுதி மற்றும் முன் அனுபவவிபரம் :

 உதவியாளருடன் இணைந்த கணினி இயக்குபவர்
• பன்னிரண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
• அரசுஅங்கீகாரம் பெற்ற நிறுவனத்தில் கணினி கல்வியியல் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் பட்டயப் பயிற்சி பெற்றிருக்க வேண்டும்.
•கணினி இயக்குவதில் ஒரு வருட முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
• 42 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.


மேற்குறிப்பிட்ட தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் https://pudukkottai.nic.in/ என்ற இணையதள முகவரியில் விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பபடிவத்தினை அனைத்து கல்வி சான்றிதழ்களின் நகல்களுடன் இணைத்து நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ 20.09.2024 அன்று மாலை 5.30 மணிக்குள் கீழ்கண்ட முகவரிக்கு கிடைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. காலதாமதமாக பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது என தெரிவிக்கப்படுகிறது.

விண்ணப்பங்கள்அனுப்ப வேண்டிய முகவரி:
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் ,
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு,
மாவட்ட முன்னாள் படைவீரர்கள் நல அலுவலக வளாகம், 
கல்யாணராமபுரம் 1-ஆம் வீதி,
திருக்கோகர்ணம் அஞ்சல்,
புதுக்கோட்டை -622002

அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் பதிவிறக்கம் செய்ய : இங்கே கிளிக் செய்யவும்


Post a Comment

புதியது பழையவை
இன்றைய கார்மெண்ட்ஸ் வேலைவாய்ப்புகள் Click here
இன்றைய தனியார் வேலைவாய்ப்புகள் Click here
இன்றைய அரசு வேலைவாய்ப்புகள் Click here