ஓட்டுநர்(Driver) பணி - தொழிலகப் பாதுகாப்பு மற்றும் சுகாதாரத்தறையில் வேலை வாய்ப்பு

 

            22.08.2024 அன்று தொழிலகப் பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்குநர் (மு.கூபொ.) அவர்கள் வெளியிட்டுள்ள அறிவிக்கை பின்வருமாறு:

          சென்னையிலுள்ள தொழிலகப் பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்ககத்தில் காலியாக உள்ள : (ஒன்று) 1 ஓட்டுநர் பணியிடத்திற்கு சென்னை மாவட்டத்தை இருப்பிடமாக கொண்ட பழங்குடியினர் (Scheduled Tribes) வகுப்பை சார்ந்த விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

          ஓட்டுநர் பணிக்கான பின்வரும் தகுதிகளை பூர்த்தி செய்திருப் பவர்கள் மட்டுமே இப்பணிக்கு விண்ணப்பிக்க இயலும்.

* குறைந்தபட்ச வயது வரம்பு * உச்ச வயது வரம்பு:

18 வயது நிரம்பியிருக்க வேண்டும் :01.07.2024 அன்றுள்ளவாறு37 வயதிற்கு மிகாமலும் இருக்க வேண்டும்.

 

 

* கல்வித் தகுதி: 8ம் வகுப்பு தேர்ச்சி

 

* பிற தகுதிகள்:

1. தகுதி வாய்ந்த உரிமம் வழங்கும் அதிகாரியிடம் பெறப்பட்ட இலகுரக மோட்டார் வாகன ஓட்டுநர் உரிமம்.

2. மோட்டார் பொறிமுறை பற்றிய முழுமையான அறிவு. 3. இரண்டு ஆண்டுகளுக்கு குறையாத காலத்திற்கு மோட்டார் வாகனங்களை ஓட்டிய அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

தகுதியுடைய விண்ணப்ப தாரர்கள் உரிய விண்ணப்பத்தை 27.08.2024 முதல் 13.09.2024 வரையிலான அரசு பணி நாட்களில் காலை 11.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை கீழ்க்கண்ட  முகவரியிலிருந்து பெற்று அதனை முறையாக பூர்த்தி செய்து 17.09.2024 அன்று மாலை 5.00 மணிக்குள் பதிவு அஞ்சல் வழியாகவோ அல்லது நேரடியாகவோ சமர்ப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.

 தொழிலகப் பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்குநர் அலுவலகம்

T.S.No.47/1. திரு.வி.. தொழிற்பேட்டை

(மெட்ரோ வாட்டர் ரவுண்டானா அருகில்), 

கிண்டி,

சென்னை - 600 032.


அதிகாரப்பூர்வ அறிவிப்பு

பதிவிறக்கம்

செய்ய

இங்கே கிளிக் செய்யவும் 

Post a Comment

புதியது பழையவை
இன்றைய கார்மெண்ட்ஸ் வேலைவாய்ப்புகள் Click here
இன்றைய தனியார் வேலைவாய்ப்புகள் Click here
இன்றைய அரசு வேலைவாய்ப்புகள் Click here