இழந்த எதையும் மீட்டு தரும் – எண்கண் முருகன் கோயில் எங்குயுள்ளது தொியுமா?

 

இழந்த எதையும் மீட்டு தரும் – எண்கண் முருகன் கோயில் எங்குயுள்ளது தொியுமா?          தமிழ்நாட்டில் உள்ள திருவாரூர் மாவட்டத்தில் எண்கண் என்ற ஊரில் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது.

திருவாரூரிலிருந்து தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலையிலிருந்து சுமார் 12 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது.

இத்திருத்தலம் திருவாரூர் மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற தலமாக அமைந்துள்ளது.

 

இந்த ஆலயத்தில் குடிகொண்டுள்ள அருள்மிகு எண்கண் முருகன் சிலைவடிவம்  சோழ மன்னான முத்தரச சோழன்  காலக்கட்டத்தில் சிலை  வழக்கப்பட்டதாகவும், இச்சிலை செய்த சிற்பி இருகண்கள் மற்றும் வலது கட்டை விரல் இல்லாமலும் சிலை வடிவமைத்தார் என்று வரலாறு செய்தி.

இக்கோயிலில் உள்ள சிலை போல தமிழ் நாட்டில் உள்ள எட்டுக்குடி முருகன், சிக்கல் சிங்கார வடிவேலர் சிலை மற்றும் எண்கண் முருகன் கோயில் சிலை  ஆகிய மூன்று ஒரே மாதிரியாக  மற்றும் முருகன் அமர்ந்து இருப்பது போன்றும் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது போன்று வேறு எந்த முருகன் கோயிலும் இல்லை.

இக்கோயிலின் தல விருட்மாக வன்னிமரம் உள்ளது.

இக்கோயிலில் உள்ள முருகன் சிலை  மயில் மேல் அமர்ந்திருப்பது போன்றும், மயில் ஒற்றைக்காலில் நிற்பது போன்று உள்ளது. அது போன்று இங்குள்ள முருகன் சிலை எட்டு கண்களை உள்ளதால் இவ்வூர் எண்கண் என்று பெயர் பெற்றதாக கூறப்படுகிறது. இத்திருக்கோயில் முருகன்பெருமான் தெற்கு நோக்கி அமர்ந்துள்ளார்.

 


எண்கண் முருகன் தரிசிப்பதால்

தீராத கண் பிரச்சனைகள்

குழந்தை பாக்கியம்

சொத்து பிரச்சனை

மற்றும் வேண்டியதை வரம் அளிக்கும் திருவாரூரில் வீற்றிருக்கும் எண்கண் முருகனை ஒரு முறையாவது தரிசனம் செய்து முருகன் பெருமான் அருள்பெறுக! வாழ்க வளமுடன்!

எண்கண்அருள்மிகு சுப்ரமணியசுவாமி திருக்கோயில் 07.00 மணி முதல் பகல் 12.30 மணி வரையும், அதன் பின் மாலை 05.00 மணி முதல் இரவு 08.30 மணி வரை நடை திறந்திருக்கும்


Post a Comment

புதியது பழையவை

TELEGRAM ALERT