வங்கக்கடலில் உருவான மிக்ஜம் புயல் !! பொதுமக்கள் கனமழையில் எச்சரிக்கையாக இருக்க செய்ய வேண்டியது மற்றும் செய்யகூடாததது பற்றி விரிவான செய்தி

 


வங்கக்கடலில் உருவான  மிக்ஜம் புயல் !!

 

மாநில பேரிடர் மேலாண்மை துறை  அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

 

வங்கக்கடலில் உருவான மிக்ஜம் புயல் காரணமான  சென்னை உட்பட பல பகுதியில் கனமழை பெய்து வருவதால்  முன்னெச்சரிக்கையுடன் இருப்பதற்கு பல்வேறு  நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.  மீட்புப்பணி மற்றும் நிவராணப்பணிகளுக்கு முப்படையினை எப்போழுதும் தயார் நிலையில் வைத்துக்கொள்ள முப்படை துறை அலுவலர்களையும் கேட்டு கொள்ளப் பட்டுள்ளது. அதன் அடிப்படையில் மீனவர்களுக்கு   கிழக்கு கடற்கரையில் உள்ள 930 படகுகள்  பாதுகாப்பாக கரைக்கு திரும்பி உள்ளது. அது போன்று ஆழ்கடலில் மீன் பிடிக்க சென்றவர்களுக்கு கரைக்கு  திரும்பவும் உத்தரவு பிறப்பட்டுள்ளது.

பொதுமக்க்ள கனமழையில் எச்சரிக்கையாக  இருக்க செய்ய வேண்டியது மற்றும் செய்யகூடாததது  பற்றி விரிவான செய்தி வெளியிடபட்டுள்ளது..

மாநில பேரிடர் மேலாண்மை துறை கூறியது (செய்தி குறிப்பில்) பின்வருமாறு

 நிவாரண முகாம்கள்

 


சென்னை மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவள்ளூர், கடலூர், விழுப்புரம், காஞ்சீபுரம், மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில்  தமிழ்நாடு பேரிடர் மீட்பு படையின் 200 வீரர்கள் கொண்ட 8 குழுக்கள் மற்றும் தேசிய பேரிடர் மீட்புப் படையின் 225 வீரர்கள் கொண்ட 9 குழுக்கள் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் மேற்கொள்ள தயார் நிலையில் உள்ளதாக மாநில பேரிடர் மீட்பு துறை வெளியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டுள்ளது.

மேற்கூறிய அனைத்து மாவட்டங்களிலும் 4,967 நிவாரண முகாம் மற்றும் 121 பல்நோக்கு பாதுகாப்பு மையங்களும் தயார் நிலையில் உள்ளன.



பொது மக்கள் பேரிடர் காலங்களில்  தேவையின்றி வெளியில் நடமாடுவதை தவிர்க்க வேண்டும் என மாநில பேரிடர் மேலாண்மை துறை  கேட்டு கொள்ளப்பட்டுள்ளது.

 

வீடுகளில் அவசர உதவி பெட்டிகள் தயார் நிலையில் வைத்துக்கொள்ள வேண்டும். அவை

கயிறு

 மெழுகுவர்த்தி

டார்ச்லைட்,

தீப்பெட்டி,

கத்தி

உலர்ந்த உணவு வகைகள்

குளுக்கோஸ்

 

அவசர தேவைக்காக வெளியே செல்லும் போது  சாலைகளில் அறுந்து விழுந்த மின்சார கம்பிகளின் மீது கவனம் செல்ல  வேண்டும்

 

பேரிடர் காலங்களில் செய்ய வேண்டியவை:-

 

1.புயல் காற்று மற்றும் கனமழையினால்  கதவுகள்  மற்றும் ஜன்னல்களில் ஏற்படும்  பாதிப்பை தடுக்க மூடி வைக்கவேண்டும்.

2. தேவையான  குடிநீர்,உணவுபொருட்கள் மற்றும் மருந்து பொருட்கள் கையிருப்பு வைத்துக்கொள்ள வேண்டும்.

3. குடிநீரை காய்ச்சி  அருந்த வேண்டும்.

4. தாழ்வான பகுதியில் குடியிருப்பவர்கள் அருகில் உள்ள முகாம்களுக்கு சென்று பாதுகாப்பாக இருக்க வேண்டும்.

5.மீனவர்கள்  தங்களது படகுகளுக்கு  இடையே போதுமான இடைவெளியுடன் படகுகளை  பாதுகாப்பான இடங்களில் வைக்க வேண்டும்.

 

பேரிடர் காலங்களில் செய்யக்கூடாதவை:-

1.புயல் கரையை கடக்கும்போது வெளியில் செல்வதே  அல்லது வாகனத்தில் பயணிக்க வேண்டாம் என  அறிவுறுத்தப்படுகிறது.

2.வானிலை மையம் அதிகாரபூர்வ அறிவிப்பு வரும் வரை வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும்

3. மரங்கள், மின்கம்பங்கள் மற்றும் மின் கம்பிகளுக்கு அருகில் நிற்கவோ, ஈரமாக இருந்தால் மின்சாதனங்களை உபயோகிக்கவோ, பழுதடைந்த கட்டிடங்களுக்கு உள்ளே செல்ல வேண்டாம் என  அறிவுறுத்தப்படுகிறது

 

இவ்வாறு  செய்தி குறிப்பில்  கூறப்பட்டு உள்ளது.


Post a Comment

புதியது பழையவை

TELEGRAM ALERT