தமிழகத்தில் அக்டோபர் 31-ம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய பொது முடக்கம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

 

தமிழகத்தில் அக்டோபர் 31-ம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய பொது முடக்கம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதன்படி, நவம்பர் 1-ம் தேதி முதல் 1 முதல் 8 வரையிலான வகுப்புகளுக்குப் பள்ளிகளைத் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மருத்துவ வல்லுநர்கள், பெற்றோர்கள், கல்வியாளர்கள் ஆகியோரது கருத்துகளைக் கேட்ட பிறகு இந்த முடிவுக்கு வந்ததாக அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சமுதாய அரசியல் கலாசார நிகழ்வுகள், திருவிழாக்களுக்கு விதிக்கப்பட்ட தடை தொடர்ந்து நடைமுறையில் இருக்கும். வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய கிழமைகளில் அனைத்து வழிபாட்டு தலங்களும் தொடர்ந்து மூடப்பட்டு இருக்கும். கடைகளில் நுழைவு வாயிலில் வாடிக்கையாளர்களுக்கு உடல் வெப்ப நிலை கருவி கொண்டு பரிசோதிக்க வேண்டும். கடைகளில் பணிபுரிபவர்களும், வாடிக்கையாளர்களும் கட்டாயம் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும். கடைகள் குளிர்சாதன வசதி இல்லாமல் இயங்க வேண்டும். சமூக இடைவெளியை அவசியம் கடைபிடிக்க வேண்டும். கடைகளின் நுழைவு வாயிலில் மக்கள் காத்திருக்கும்போது போதுமான இடைவெளியை கடைபிடிப்பதை உறுதி செய்ய வேண்டும். மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் திங்கள் கிழமைகளில் பொதுமக்கள் குறை தீர்க்கும் நாள் மற்றும் மாதாந்திர விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கொரோனா இரண்டாம் அலை முழுவதுமாக முடியாத நிலையில், பண்டிகை காலங்களில் கவனமுடன் இருக்க வேண்டும் -தமிழக அரசு. கூட்டம் கூடும் இடங்களுக்கு செலதை மக்கள் தவிர்க்க வேண்டும். உரிய கட்டுப்பாடுகளைக் கடைபிடித்தால் மட்டுமே 3-வது அலையை தவிர்க்க இயலும்.










Post a Comment

புதியது பழையவை

TELEGRAM ALERT