உடல் எடை குறைய மிக அற்புதமான மருந்து கொடுக்காப்புளி

 


உடல் எடை குறைய மிக அற்புதமான மருந்து கொடுக்காப்புளியும் ஒன்று......!

 நாம்  அறிந்த கொடுக்காப்புளி உடல் எடையை  குறைக்கும் என்று நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்….!

கொடுக்கப்புளியை தமிழ்நாட்டில் பிறந்த அனைவரும் சாப்பிடாமல் இருந்திருக்க மாட்டார்கள் என்று கூறலாம். வெப்பமண்டல பகுதியில் வளரக்கூடிய ஒரு மரம் தான். கோடை விடுமுறை காலங்கள் கொடுக்காப்புளி மரங்கள் காய்க்கள் காய்க்க தொடங்கும். நம் பால்ய வயதுகளை  ஆரோக்கியமாகவும் மாற்றியதில் எத்தனையோ உணவுப்பொருட்களுக்கு கொடுக்காப்புளிக்கும் பங்கு உண்டு என்று கூறலாம்.

 

தமிழ் பெயர்

கொடுக்காப்புளி ,கோண புளியங்கா, சீனி புளியங்கா என பல பெயர்கள்

கொடுக்காப்புளியின் பிறப்பிடம்

இந்தியா, இலங்கை, பங்களாதேஷ்

ஆங்கில பெயர்                 

Monkey Pod மற்றும் Manila tamarind

இனம்

Fabaceae என்கிற பட்டாணி  வகை

சுவை

காயாக இருந்தால் துவர்க்கும் தன்மை கொண்டது.

பழமாக இருந்தால் துவர்ப்போடு சேர்ந்து இனிக்கும்

 

சத்துக்கள்,சிறப்பம்சங்கள்  மற்றும் மருத்துவ குணங்கள்

·                     உடல் பருமனும் குறையும்

·                     வைட்டமின் E இதில் அதிகம்.

·                     அதனால் என்றும் இளமையான  

      தோற்றத்தையும் கொடுக்காப்புளி கொடுக்கிறது

 

·                     செரிமானத்தை  நெறிப்படுத்தும்

·                     உடல் எடை குறைய மிக அற்புதமான மருந்து.

·                     புண்களை குணப்படுத்தும்

·                     கொடுக்காப்புளியில் சத்துக்கள்

·                     கொடுக்காப்புளியில் வைட்டமின் சி அதிகமாக   

             உள்ளது.

 

·                     பொட்டாசியம் மற்றும் கால்சியம்

·                     எலும்பு  மற்றும், பற்களை பலப்படுத்துகிறது

·                     இரும்புச்சத்து

·                     உடல் சோர்வை நீக்கி புத்துணர்ச்சி  

           கொடுக்கிறது

 

·                     வைட்டமின் A, வைட்டமின் B1, வைட்டமின் B2,  

             வைட்டமின் B6

 

·                     நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது

·                     நரம்பு மண்டலத்தை ஊக்கப்படுத்தும்

·                     இளம்பெண்களுக்கு வரக்கூடிய முகப்பருக்கள்  

             மற்றும் கரும்புள்ளிகளை  வராமல் தடுக்கும்

 

·                     கிருமிநாசினியாகவும்  பயன்படுகிறது

·                     அதிக துவர்ப்புச்சுவை இருப்பதால் ஆண்மைக்  

             குறைபாடு நீங்கும்

மருந்தாகப் பயன்படுத்தும் முறை


·                     கொடுக்காப்புளி மற்றும் அதனுடைய விதையை சேர்த்து அரைத்து அந்த விழுதை Eye pack காக உபயோகித்தால்கண் எரிச்சல் மற்றும் இதர கண் பிரச்சனைகளிலிருந்து விடுபடலாம்

 

·                     கொடுக்காப்புளி விதையை எடுத்து தோலை நீக்கி, சதைப்பகுதியை மட்டும் எடுத்துக் கொள்ளவேண்டும்

 

·                     நிழலில் உலர்த்தி பொடி செய்து  அந்த பொடியை ½ கிராம் எடுத்து, ½கி.மல்லித்தூள், ½கி. சீரகப்பொடி உடன் சேர்த்து தேனுடன் கலந்து சாப்பிட்டு வந்தால் அஜீரண கோளாறு நீக்கும்

 

·                     உப்பு, சுக்கு, மிளகு, திப்பிலி, மல்லி, கருஞ்சீரகம், ஏலக்காய் மற்றும் கொடுக்காப்புளியின் சதையை எல்லாவற்றையும் சம அளவாக எடுத்து பொடி செய்துக்கொள்ள வேண்டும்

 

·                     அதில் 2 கிராம் அளவுக்கு தேன் சேர்த்து சாப்பிட வேண்டும். இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.

கொடுக்காப்புள்ளியை வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம்  வாங்கி ரசித்து உண்ணுங்கள் சொல்லப் போனால் தேடிப்பிடித்துக் கூட உண்ணுங்கள்’’

Post a Comment

புதியது பழையவை

TELEGRAM ALERT