இந்தியாவின் எடிசன் என்று அழைக்கப்படுவர் யார் தெரியுமா?

 

இந்தியாவின் எடிசன்  என்று அழைக்கப்படுவர் யார் தெரியுமா?  • இவர் இந்தியாவின் முதல் மின்மோட்டாரை உருவாக்கியவர்

  • ஜி.டி.நாயுடு பிறந்த ஊர் எது தெரியுமா நண்பர்களே?

  • நம் தமிழ்நாட்டில் உள்ள கோயம்புத்தூரில் பிறந்தவர். இந்தியாவின் எடிசன் என்று அழைக்கப்படுவர் ஜி.டி.நாயுடு ஆவார்.

  • ஜி.டி.நாயுடு பற்றி சில தகவல்களை அறியலாம் நண்பர்களே!

  • ஜி.டி.நாயுடு என்பதன் பெயர் விரிவாக்கம்

  • கோபாலசாமி துரைச்சாமி நாயுடு  என்பது ஆகும்.

  • பிறந்த ஊர்  - கலங்கல்
  • பிறந்த தேதி – 23.03.1893
  • மறைந்த தேதி – 04.01.1974

இந்தியாவின் முதல் மின்சார மோட்டார் தயாரித்தவர்.நாயுடு தனது வாழ்நாளில், மின், விவசாய, இயந்திர மற்றும் ஆட்டோமொபைல் போன்ற பல துறைகளில் நிறைய கண்டுபிடித்துள்ளார்.அவற்றில் சில

·         மண்ணெண்ணெயில் இயங்கும் விசிறி,

·         ப்ரொஜெக்ஷன் டிவி,

·         மெக்கானிக்கல் கால்குலேட்டர்,


·         டிக்கெட் வழங்கும் இயந்திரம்,

·         எலக்ட்ரிக் ரேஸர்

போன்றவை.
நாயுடு ஆட்டோமொபைல்களை பற்றி எப்பொழுது கற்றுக் கொண்டார் தெரியுமா?

அவரது சிறு வயதில் அவரது பண்ணையில் வேலை செய்து கொண்டு இருக்கும்போது ஆங்கில அதிகாரியின் வாகனத்தை பார்த்த ஜி.டி நாயுடு நாமும் அது போன்ற பைக் வாங்க வேண்டும் என்று எண்ணி கலங்கல் கிராமத்திலிருந்து கோயம்புத்தூர் சென்றார். அங்கு ஹோட்டால்களில் மற்றும் பல வேலைகள் செய்து பணத்தை சேகரித்தார். அந்த பணம் ரூபாய் .300-க்கு வாங்கினார்.அந்த வண்டியின் வடிவமைப்பு மற்றும் கட்டமைப்புகளை அகற்றி எப்படி செய்துளார்கள் மற்றும் அவரை பிரித்து மீண்டும் ஒன்று இணைத்து பார்த்தார். நாயுடு ஆட்டோமொபைல்களைப் பற்றி  இப்படி தான் கற்றுக்கொண்டார்.1920 ஆம் ஆண்டில் தனது போக்குவரத்து வணிகத்தைத் தொடங்கிய ஒரு நாயுடுவுக்கு ரூ .4,000 கடன் பெற்றார்.

அதில் இந்தியாவின் முதல் மினி பஸ்யை இயக்கினார். ஆனால் அப்பொழுது நல்ல வரவேற்பு இல்லை என்றாலும் அடுத்த சில 280 பேருந்துகள் அவரிடம் இருந்த்து. அந்த நிறுவனத்தின் பெயர் - யுனிவர்சல் மோட்டார் சர்வீஸ் (யுஎம்எஸ்) .

இதுவே இந்தியாவின் நாட்டின் மிகப்பெரிய பொது போக்குவரத்து சேவைகளில்  ஒன்று.


ஜி.டி.நாயுடு கண்டுபிடிக்கும் ஒவ்வொரு கண்டுபிடிகளிலிருந்தும் ஒரு நிறுவனம் தொடங்கி வேலைவாய்ப்புகளையும் உருவாக்கினார்.

அவற்றில் சில

·         யுனிவர்சல் ரேடியேட்டர்ஸ் தொழிற்சாலை,

·         கோபால் கடிகாரம் தொழில்,

·         கோயம்புத்தூர் டீசல் தயாரிப்புகள்

·         கோயம்புத்தூர் பொறியியல் தனியார் லிமிடெட்,

·         கோயம்புத்தூர் ஆர்மேச்சர் முறுக்கு பணிகள்,

·         யுஎம்எஸ் வானொலி தொழில்

·         கார்பன் உற்பத்தித் தொழில்

 

ஆகிய தொழில் நிறுவனங்களையும் இவர் நிறுவினார்.

 

எலக்ட்ரானிக்ஸ் துறையில்

·         நாயுடு ராசண்ட்எனப்படும் எலக்ட்ரிக் ரேஸர்,

·         மெல்லிய ஷேவிங் பிளேடுகள்,·         பழச்சாறு பிரித்தெடுத்தல்,

·         வாக்களிப்பதற்கான விற்பனை இயந்திரங்கள்

·         செலவு குறைந்த ஐந்து வால்வு ரேடியோ செட்களை

உருவாக்கினார்.

 


கல்வித்துறையில்

இந்தியாவின் முதல் பாலிடெக்னிக் கல்லூரி,  1945 ஆம் ஆண்டு ஆர்தர் ஹோப் பாலிடெக்னிக்  உருவாக்கியத்தில் முக்கிய பங்கு வகித்தவர். அந்த பாலிடெக்னிக் பெயர் மாற்றப்பட்டு  தற்போது கோயம்புத்தூர் அரசு பாலிடெனிக் என்று அழைக்கப்பட்டுவருகிறது.

ஜி.டி. நாயுடு அறக்கட்டளையில் பல பள்ளிகள் தற்போழுது வரை இயக்கப்பட்டுகிறது.இவரை விஞ்ஞானி, கண்டுபிடிப்பாளர், தொழிலதிபர், புகைப்படக் கலைஞர் என்றும் போற்றப்படுகிறார்.

இவரை பற்றி மேலும் தெரிந்து கொள்ள  மற்றும் அவருடைய கண்டுபிடிப்புகளை பார்ப்பதற்கு கோயம்புத்தூர் உள்ள அருங்காட்சியத்தில் காணலாம்.  நாம் இந்த அருங்காட்சியாகத்திற்கு நம் குழந்தைகளை அழைத்து சென்றால் அது குழந்தைகளுக்கு மிகவும் பயன் உள்ளதாகவும் இருக்கும். நமக்கு கிடைக்கும் நேரங்களை பயன் உள்ள நேரமாக மாற்றலாம் நண்பர்களே!ஜி.டி நாயுடு அருங்காட்சியகத்தின் முகவரி

734, President Hall,

அவினாஷி சாலை,

அண்ணா சாலை கோவை - 641018.

தொலைபேசி எண் : 0422-2222548

வேலை: செவ்வாய்க்கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமை வரை

நேரம்  காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை

விடுமுறை தினம் -  திங்கள் விடுமுறை

Post a Comment

புதியது பழையவை

TELEGRAM ALERT