தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறை அருள்தரும் முத்தாரம்மன் திருக்கோயில், குலசேகரன்பட்டினம்
திருச்செந்தூர் வட்டம், தூத்துக்குடி மாவட்டம்.
வேலைவாய்ப்பு அறிவிப்பு - நாள்: 06.09.2024
தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் வட்டம், குலசேகரன்பட்டினம் அருள்தரும் முத்தாரம்மன் திருக்கோயில் அமைக்கப்படவுள்ள மருத்துவ மையத்திற்கு கீழே குறிப்பிடப்பட்ட பணியிடங்களுக்கு தகுதியான நபர்களை தேர்வு செய்து பணி நியமனம் செய்ய இந்து மதத்தினை சேர்ந்த தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து நிபந்தனை களுக்குட்பட்டு 05.10.2024 மாலை 5.45 மணிக்குள்
விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
அதற்கு பின்னர் வரப்பெறும் விண்ணப்பங்கள் எக்காரணத்தை கொண்டும் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது.
பணி விவரங்கள் :
மருத்துவ அலுவலர் - 02
35 வயது வரை
ரூ.60,000/- | MBBS (Qualified)
Registered under TNMSE
செவிலியர் -02
35 வயது வரை
ரூ.14,000/
DGNM (Diploma in General Nursing
Midwives)
பல்நோக்கு மருத்துவமனை பணியாளர்
- 02
40 வயது வரை
ரூ.6,000/-
எட்டாம் வகுப்பு தேர்ச்சி
தமிழில் எழுதி படிக்க தெரிந்திருக்க வேண்டும்
நிபந்தனைகள்
1. இந்து மதத்தை சார்ந்தவராகவும், தமிழ்நாட்டை சார்ந்தவராகவும் இருக்க வேண்டும்.
2. தொற்று நோய் உடல் அல்லது மனநலம் குன்றிய குறைபாடுகள் உள்ளவர்கள் விண்ணப்பிக்க தகுதியற்றவர்கள்.
3.
i) நீதிமன்றத்தில் தண்டனை அடைந்தவர்கள்,
ii) பட்ட கடனை தீர்க்க முடியாதவர்கள் என நீதிமன்றத்தால் தீர்மானிக்கப்பட்டவர்கள்,
iii) அரசு பணிகள், பொது ஸ்தாபனங்கள் மற்றும் வேறு இடங்களில் பணிபுரிந்து தண்டனை காரணமாக பணிநீக்கம் செய்யப்பட்டவர்கள் ஆகியோர்கள் மேற்படி பணிக்கு விண்ணப்பிக்க தகுதியற்றவர்கள்.
4. நன்னடத்தை உடையவர்களாக இருக்க வேண்டும். இதற்கு அரசிதழில் பதிவு பெற்ற அரசு உயர் அதிகாரிகளிடமிருந்து பெறப்பட்ட நன்னடத்தைச் சான்று பெற்று சமர்ப்பிக்க வேண்டும்.
5. விண்ணப்பதாரர்கள் ஒவ்வொரு பதவிக்கும் அந்தந்த பதவிக்குரிய கல்வி மற்றும் தகுதி சான்றுகள் மற்றும் இதர விபரங்களுடன் தனித்தனியாக விண்ணப்பிக்க வேண்டும்.
6. வரப்பெற்ற விண்ணப்பங்கள் அனைத்தும் சரிபார்க்கப்பட்டு தகுதியுள்ள நபர்களுக்கு மட்டுமே நேர்முக தேர்வுக்கு அறிவிப்பு அனுப்பப்படும்.
7. நேரடி நியமனம் இந்து சமய அறநிலையத்துறை சட்ட விதிகளுக்கு உட்பட்டவை.
8. விண்ணப்பங்களுடன் அனுப்பப்படும் அனைத்து சான்றிதழ்களும் அரசு பதிவு பெற்று அலுவலர் அரசு பதிவு பெற்ற அலுவலர் சான்றொப்பம் பெறப்பட்ட புகைப்பட நகல்களாக மட்டுமே இருக்க வேண்டும். அசல் சான்றிதழ்களை அனுப்பக்கூடாது.
9. ராஜீகத்தாலும், தெய்வீகத்தாலும் ஏற்படும் மாற்றங்களுக்கு நிர்வாகம் பொறுப்பல்ல.
10. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள்
செயல் அலுவலர்,
அருள்தரும் முத்தாரம்மன் திருக்கோயில்,
குலசேகரன்பட்டினம்,
திருச்செந்தூர் வட்டம்,
தூத்துக்குடி மாவட்டம் 628206
என்ற முகவரிக்கு 05.10.2024 அன்று மாலை 5.45க்குள் கிடைத்திடும்
வகையில் அனுப்பி வைக்க வேண்டும்.
விளம்பர அறிவிப்பினில் குறிப்பிட்ட கடைசி தேதிக்கு பின்னர் வரப்பெறும் விண்ணப்பங்கள், விண்ணப்பத்தில் உரிய பட்டியலில் முழுமையாக பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பங்கள், கோரப்பட்ட சான்றுகள் இணைக்கப்படாமல் வரப்பெறும் விண்ணப்பங்கள் எவ்வித பரிசீலனைக்கும் எடுத்துக் கொள்ளப்பட மாட்டாது.
நிராகரிக்கப்படும்.
விண்ணப்பங்கள் திருக்கோவில் அலுவலகத்தில் நேரிலோ அல்லது https://hrce.tn.gov.in என்ற இணையதளத்தில் அருள்தரும் முத்தாரம்மன் திருக்கோவில் என்கிற பெயரில் உள்ள பக்கத்தில் ஆன்லைன் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
அதிகாரப்பூர்வ இணையதளம்
செல்ல |
|
அதிகாரப்பூர்வ அறிவிப்பு பதிவிறக்கம் செய்ய |
கருத்துரையிடுக