நரைமுடியை கருமையாக்கும் கீரை எது தெரியுமா?

நரைமுடியை  கருமையாக்கும் கீரை எது தெரியுமா?

கீரைகளின் ராணி   எது தெரியுமா?

காயகற்ப மூலிகை  எது தெரியுமா?

தங்க மூலிகை எது தெரியுமா? நாம் தலை மூடியை கருமையாக பல்வேறு முயற்சிகள் செய்துக்கொண்டு இருக்கிறோம்.

அதில்  ஒரு வழி அதுவும் இயற்கையான முறையில்  மற்றும் விலை மலிவாக  அல்லது கிராமங்களில் உள்ள  வயல்வெளிகளில் இருக்கும்  ஒரு வகை கீரை தான் . அந்த கீரையின் பெயர் என்ன கீரை தெரியுமா?

            இப்பொழுது  சிறியவர் முதல் பெரியவர்கள் வரை  ஆண் , பெண் என்று பாகுபாடுயின்றி   பணத்திற்கு பிறகு கவலைப்படும் விஷயம் என்றால் அது நரை முடி பற்றிய மிக பெரிய கவலை தான் .

 

அந்த கீரையின் பெயர் – கரிசலாங்கண்னி கீரை தான்.

இந்த கீரைக்கு பல்வேறு பெயர்கள் உண்டு அவை காயகற்ப மூலிகை, தங்கமூலிகை, கீரைகளின் ராணி போன்ற பல்வேறு பெயர்கள் உள்ளன.

 கரிசலாகண்ணியில் இரண்டு வகையானவை அவை மஞ்சன் நிற பூக்கள் கொண்டது மஞ்சள் கரிசலாகண்ணி மற்றும் வெள்ளை நிற பூக்கள் கொண்டது வெள்ளை கரிசலாகண்ணி ஆகும்

இந்த கீரையின் பயன் பற்றி சில பேருக்கு தெரிந்து இருக்கும் பல பேருக்கு  தெரிந்து இருக்காது.  அதனால் இதனை பற்றிய சில தகவல்கள்

அதை மிகவும் எளிதாக எப்படி உபயோகப்படுவது என்று பார்போம் நண்பர்களே!!

கரிசலாங்கன்னி கீரை எங்கு வாங்குவது  நகரத்தில் வாழும் நண்பர்கள் ஒரு யோசனை எழும்   காய்கறி சந்தையில் கீரை விற்கும்  வியாபாரிகளிடம்  செல்லி  அந்த கீரையை வாங்கிக்கொள்ளவும்.

அதுசரி அந்த கீரை எப்படி இருக்கும்  என்பதை  கீழே  அதன் புகைப்படம்  உள்ளது.

 

அதை எவ்வாறு உபயோகிப்பது (வெள்ளை கரிசலாங்கண்ணி கீரை)

வாரத்திற்கு ஒரு முறை உபயோகிக்கவும். ( வார விடுமுறை நாட்களில் மிகவும் உத்தமம்)

கரிசலாங்கன்னி கீரை யை  ஒரு கைபிடி ( வேரை மட்டும் நீக்கிய பிறகு ) மற்ற அனைத்தையும் சேர்த்து  மிக்ஸில்  நன்கு அரைக்கவும். அரைத்த விழுது நன்கு கருமையாக இருக்கும். (தேவையானஅளவு தண்ணீர் சேர்க்கவும்)

தலைப்பகுதியில் அனைத்து இடங்களில்   நன்கு அப்ளை செய்யவும்.

பின் அரைமணி நேரம் கழித்து  வேறு எந்த  ஷாம்பு அல்லது சீயக்காய் பவுடர்  எதுவும் சேர்த்து குளிக்க வேண்டாம்.

இது போன்று மாதத்திற்கு நான்கு முறை அல்லது ஐந்து முறை குளித்து வந்தால்  தலை முடி கருமையாக இருக்கும். நரை முடி பிரச்சனை இருக்காது. மேலும், முடி கருமையாக வளர மற்றும் முடி கொட்டாமல் இருக்க  தினமும் காலை எழுந்தவுடன் பல்துலக்கியப்பின்  வெறும் வயிற்றில்  இரண்டு கொத்து கருவேப்பிலை  இலைகளை நன்கு மென்று  சாப்பிடவும்.

மற்றொரு முறை

                                                 

கரிசாலங்கண்ணி கீரை வாங்கிய பின் அரைத்து  சிறிய  அளவில் அடை போன்று தட்டி  அவற்றை  வெயிலில் நன்கு காய வைத்து அதை  செக்கு தேங்காய் எண்ணெ்யில் போட்டு  இரண்டு வாரங்களுக்கு ஊற வைத்து  தலை முடியில் தடவி வர  முடி கருமையாகவும் மற்றும் முடி நன்கு நீளமாக வளரும்.

இது போன்று செய்தால் எந்த  கெமிக்கலும்  இல்லாமல் இயற்கையான முறையில்  நமது தலைமுடியை  அழகு மற்றும் பொலிவுடன் பாதுகாக்காலம்.  பணத்தை விரையம் ஆகாமல்  நரை முடிய சுலபமான முறையில் கருமையாகலாம் .


இந்த செய்தி  உங்களுக்கு உபயோகமாக இருக்கும் என்று நம்புகிறோம் நன்றி!!!


Post a Comment

புதியது பழையவை

TELEGRAM ALERT