நோய்களை குணமாக்கும் திருச்செந்தூர் அருள்மிகு சுப்ரமணியசுவாமி திருக்கோயில் வழங்கப்படும் பன்னீர் இலை விபூதி பிரசாதம் பற்றிய சிறப்புகள் உங்களுக்கு தெரியுமா?

 


நோய்களை குணமாக்கும் திருச்செந்தூர் அருள்மிகு சுப்ரமணியசுவாமி திருக்கோயில் வழங்கப்படும் பன்னீர் இலை விபூதி பிரசாதம்  பற்றிய சிறப்புகள் உங்களுக்கு தெரியுமா?

இக்கட்டுரையில் நாம் அறிய உள்ளன:

·       கோயிலின் தல பெருமை பற்றி

·       பன்னீர் இலை விபூதி பிரசாதம் பற்றி

·       புனித தீர்த்தம் நாழிகிணறு பற்றி

·       துலாபாரம்   பற்றி தகவல்கள்

·       தகவல் நிலையம்  பற்றி தகவல்கள்

·       மின்கல ஊர்திகள்  பற்றி தகவல்கள்


தல பெருமை


1.முருகனின் ஆறுபடைவீடுகளில் இரண்டாம் படை வீடு -  திருச்செந்தூரில் அமைந்துள்ள அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோயில்  ஆகும்.

2.இந்த கோயில் வங்காள விரிகுடா கடற்கரையில் அமைந்துள்ளது.

3.பொதுவாக குன்று இருக்கும் இடங்களில் முருகன் இருக்க இங்கு கடற்கரையில் இந்த கோயில் உள்ளது ஒரு சிறப்பு.

4.இது புரான கதைகளில் இந்த கோயில் அமைந்துள்ள இடம் சநதனமலையின் ஒரு பகுதியாக இருந்து என்றும், இந்தியாவின் தீபகற்பத்தின் தென்னிந்தியாவில்  தென்மேற்கில் உள்ளது.

5.சுமார் 2000 ஆண்டுகளுக்கு மேலான கட்டமைப்பு உடையதாக பண்டையா கால நூல்களில் குறிப்பிட்டுள்ளது

6. திருமுருகாற்றுப்படையில், இத்திருத்தலம் பெருமைகள் அதிகமாக கூறப்பட்டுள்ளது

7. ஆறு படை வீடுகளில் திருச்செந்தூர் அருள்மிகு சுப்ரமணியசுவாமி திருக்கோயில் முக்கியத்துவம் வாய்ந்த இரண்டாவது இடத்தில் உள்ளது.

8.மகராஜா மார்த்தாண்ட வர்மா நான்கு நூற்றாண்டுகளுக்கு முன்பு முதன் முதலாக ஒவ்வொரு நாள் காலையிலும்  மற்றும் மாலையிலும் உதயமார்தாண்ட கட்டளையை வழங்கினார். மற்றவர்கள் அன்றைய ஒன்பது கால ஆராதனைகளை பின்பற்றினர். காலப்போக்கில் கடல் மற்றும் அதன் உப்பு நிறைந்த காற்றின் விளைவாக அசல் கட்டுமானத்தில் முதலில் பயன்படுத்தப்பட்ட தாழ்வான மணல் கற்கள் சரிய தொடங்கியது. அப்போது ஒரு உன்னத சாது மௌன சுவாமி கற்கள் சிதைந்த நிலையில் இருப்பதை கண்டார். அவர் உடனடியாக புனரமைப்பு மேற்கொண்டார் .

9.1941-இல் குடமுழுக்கு நடைபெற்றது. 9 தளங்களை கொண்ட கோபுரம் மணல் ,கல், பாறையின் உச்சியில் கட்டப்பட்ட ஒரு நிலையினை அடையாளம் ஆகும். இத்திருக்கோயில் கடலில் இருந்து பார்த்தால் சுமார் 12 மைல்களுக்கு சுற்றளவு தெரியும் அளவுக்கு இத்திருக்கோயில் அமைந்துள்ளது. என்பது இன்னொரு சிறப்பு கோயில் முழுவதுமே கடலில் பாய் மரம் மிதந்து செல்வது போல் காட்சி அளிக்கிறது மனத்திற்கு கண்கொள்ளா காட்சியாக இருக்கும்.


பிரசாதம் - பன்னீர் இலை விபூதி



1.     பொதுவாக முருகன் கோயிலில் பொதுவாக பிரசாதமாக வழங்கும் விபூதி மிகவும் மகத்துவமானது.

2.     இங்கு வழங்கப்படும் பன்னீர் இலையில் வைத்து வழங்கப்படும் விபூதி பிரசாதம் அனைத்து நோய்களை தீர்க்கக்கூடிய அருமருந்தாக உள்ளது.

3.      முருகப்பெருமானுக்கு பன்னிரு கைகள் உள்ளது போல பன்னீர் மரத்தின் இலைகளில் 12 நரம்புகள் கொண்டு உள்ளன. பன்னீரு இலைகள் என்பது மருவி பன்னீர் இலைகள் என அழைக்கப்படுகிறது. பன்னீர் இலைகளை பார்க்க முருகனின் வேல் போன்றே இருக்கும்.

4.     பன்னீர் இலைக்கு வேத மந்திர சக்தி உள்ளது.

 

பிரசாதம் - அஞ்சல் வழி பிரசாதம்

 பொருட்கள் உள்ளடக்கம்:
1.
புட்டமுது - 100 கிராம்
2.
இலை விபூதி - 1 எண்ணம்
3.
மூலவர் மற்றும் சண்முகர் புகைப்படம் - 1 எண்ணம்

பிரசாதம் பெற தொடர்புக்கு: 0463924221

 

புனித தீர்த்தம்- நாழி கிணறு



1.      திருச்செந்தூரில் இதற்கு முன்பு, காயத்ரி மந்திரத்தின் 24 எழுத்துக்களை குறிப்பிடும் வகையில் 24 தீர்த்தங்கள் இருந்ததாக சொல்லப்படுகிறது.

2.       இவற்றில் கந்தபுஷ்கரணி என்று அழைக்கப்பட்ட தீர்த்தமே இந்த நாழிக்கிணறு ஆகும்.

3.      இங்கு மட்டுமே பக்தர்கள் தற்போது நீராடி வருகிறார்கள். கோவிலுக்குத் தெற்கே இந்த நாழிக்கிணறு உள்ளது.

4.      பெரிய கிணற்றுக்குள்ளே ஒரு சிறு கிணறாக ஒரு சதுர அடிப் பரப்பும், ஏழு அடி ஆழமும் உள்ள இந்தத் தீர்த்தம், உப்புத் தன்மை இல்லாத நன்னீராக இருக்கிறது.

5.      கந்தக் கடவுளின் அருளால் அமைந்த இந்தத் தீர்த்தத்தில் நீராடுபவர்கள், சகல நன்மைகளையும் அடைவார்கள். இதில் எவ்வித கட்டணமும் இன்றி பக்தர்கள் நீராடி பயனடையலாம்.

 

தங்கரதம் -  சண்முக விலாசம் கடற்கரை அருகில்


1.இத்திருக்கோயிலின் தங்கரதப்புறப்பாடு நாள்தோறும் மாலை 6.00 மணிக்கு நடைபெறும்.

2. தங்கரதப்புறப்பாட்டில் கலந்து கொள்ள விரும்பும் பக்தர்கள், உள்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்திலும் , இணைய வழியாகவும் ரூ.2500/- கட்டணம் செலுத்தி முன் பதிவு செய்து கொள்ளலாம் . தொடர்புக்கு : 04639 242270

துலாபாரம்  - சண்முக விலாச மண்டபம் அருகில்

1.      இத்திருக்கோயிலுக்கு வருகை தரும் பக்தர்கள் தங்கள் எடைக்கு நிகரான காணிக்கை பொருள்களை துலாபாரம் மூலம் செலுத்தி ரசீதினை பெற்றுக்கொள்ளலாம். தொடர்புக்கு: 04639242270

தகவல் நிலையம்  - ராஜகோபுரம் பின்புறம்

                                                                            

திருக்கோயில் பற்றிய முழு விபரங்கள் அளிக்கும் வகையில் திருக்கோயில் தகவல் நிலையம் மூலம் 24 மணி நேரமும் ராஜகோபுரம் பின்புறம் பக்தர்களுக்காக செயல்பட்டு வருகிறது .
தொடர்புக்கு : 04639 242271

 

மின்கல ஊர்திகள்  - காவடி மண்டபம்



இத்திருக்கோயில் வளாகத்தில் மாற்றுத் திறனாளிகள் மற்றும் மூத்தகுடிமக்களுக்கு கட்டணமில்லா சேவையில் ஐந்து மின்கல ஊர்திகள் பயன்பாட்டில் உள்ளது. இந்த கட்டணமில்லா சேவை ராஜகோபுரம் அருகே அமைந்துள்ள காவடி மண்டபம் முன்புறம் துவங்கி கடற்கரை சண்முக விலாசம் வரை செயல்படும் .
தொடர்புக்கு : 9442089105

 

முன்பதிவு செய்ய கீழ்க்கண்ட லிங்கை கிளிக் செய்யவும்

  https://tiruchendurmurugan.hrce.tn.gov.in/ticketing/service_collectionindex.php?tid=38271&scode=21&sscode=1&target_type=1&group_id=4


Post a Comment

புதியது பழையவை

TELEGRAM ALERT