டூப்ளிகேட் டிரைவிங்(Duplicate DL ) லைசென்ஸ் பெற ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி ?

 ஒரிஜினல் டிரைவிங் லைசென்ஸ்(DL) தொலைந்து விட்டதா? 


டூப்ளிகேட் டிரைவிங்(Duplicate DL ) லைசென்ஸ் பெற, நாம் இருக்கும் இடத்தில் இருதந்து  சில நிமிடங்களில் ஆன்லைனில் விண்ணப்பிக்க முடியும் .

இந்த செயல்முறை நமதுநாட்டில் உள்ள மாநிலங்களுக்கு மாநிலம் வேறுபடும்.என்பதை அறிக.

தேவையான ஆவணங்கள் .

- படிவம்-2 (Form-2) LLD

- உரிமத்தின் நகல்

 - பாஸ்போர்ட் அளவு புகைப்படம்

- வயதுச் சான்று

- முகவரிச் சான்று 

ஆகியவை தேவைப்படும்

விண்ணப்பிக்க :

➡️டூப்ளிகேட் டிரைவிங் லைசென்ஸுக்கு விண்ணப்பிக்க, முதலில் ஓட்டுநர் உரிமம் விண்ணப்பிக்கம்  ஆன்லைன் விண்ணப்பப் படிவம் :   https://sarathi.parivahan.gov.in/  என்ற வெப்சைட்டுக்கு செல்லுங்கள்.

➡️அங்கு'ஆன்லைன் சேவைகள்' என்பதைத் தேர்ந்தெடுத்து, பின்னர் 'டிரைவிங் லைசென்ஸ் தொடர்பான சேவைகள்' என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.


➡️இப்போது 'தமிழ்நாடு' மாநிலத்தைத் தேர்ந்தெடுக்கவும்.


➡️பின்னர், புதியதாக திறக்கும் பக்கத்தில் ’டிரைவிங் லைசென்ஸ்' பக்கத்திற்குச் சென்று, 'சர்வீசஸ் ஆன் டிஎல் (புதுப்பித்தல்/நகல்/ஏஇடிஎல்/ஐடிபி/மற்றவை)' என்பதைக் கிளிக் செய்யவும்.



➡️'Continue' என்பதைத் தேர்ந்தெடுத்து, உங்கள் ஓட்டுநர் உரிம எண்ணையும் உங்கள் பிறந்தநாளையும் உள்ளிடவும். 


➡️இதற்குப் பிறகு, பெறப்பட்ட டிஎல் விவரங்களிலிருந்து உங்கள் ஓட்டுநர் உரிமத்தைத் தேர்ந்தெடுத்து Continue என்பதைக் கிளிக் செய்யவும்.


டூபிளிகேட் லைசென்ஸ்:


➡️அதன் பிறகு, உங்கள் மாநிலப் பெயர் மற்றும் RTO-ஐ தேர்ந்தெடுக்க வேண்டும். 


➡️உங்கள் ஓட்டுநர் உரிம விவரங்களை உறுதிசெய்து, பின்னர் 'இஷ்யூ ஆஃப் டூப்ளிகேட் டிஎல்' என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.


➡️நீங்கள் ஏன் DL க்கு விண்ணப்பிக்கிறீர்கள் என்பதை அங்கு நீங்கள் சொல்ல வேண்டும். 


➡️அதன் பிறகு நீங்கள் முன்பு பூர்த்தி செய்த விண்ணப்பப் படிவத்திற்கான பணத்தை செலுத்தி, அந்த விண்ணப்பத்தையும், ரசீதையும் பெற்றுக் கொள்ள வேண்டும்

Post a Comment

புதியது பழையவை

TELEGRAM ALERT