ஆரோக்கியத்தை அதிகரிக்க அதிமதுரத்தின் 10 நன்மைகள்

 ஆரோக்கியத்தை அதிகரிக்க  அதிமதுரத்தின் 10 நன்மைகள்


அதிமதுர டீ  செய்வது எப்பது?

அதனால் நாம் பெறும் நன்மைகள்  என்னென்ன?

அதிமதுரத்தை பற்றிய சிறு குறிப்பு?

அதிமதுரத்தின்  குணங்கள் என்ன?

அதிமதுரத்தின் நன்மைகள் என்ன?

அதிமதுரத்தின்  மற்ற மொழிகளில் உள்ள பெயர் என்ன?

இவை எவ்வாறு உபயோகிப்பது?

அதிமதுரத்தின் தீமைகள் பற்றி ?

யார் யார் உபயோகிகலாம் மற்றும் எவ்வாறு உபயோகிப்பது என்பதை அறியலாம்  நண்பர்களே!

 

அதிமதுரத்தை பற்றிய சிறு குறிப்பு?

                             

                    ஆயர்வேதம் மற்றும் சித்த மருத்துவம் ஆகியவற்றில் மிக முக்கிய இடம் பெறுகிறது. இவ்விரண்டு மருத்துவத்திலும்  மருந்துகள்  தயாரிக்க மற்றும் லேகியங்கள் தயாரிக்க கட்டாயம் தேவைப்படுகிறது. இவை இயற்கையாகவே இனிப்பு சுவை பெற்றிருக்கிறது மற்றும் ஏராளமான மருத்துவ குணங்கள் பெற்று இருக்கிறது.

 

அதிமதுரம்  மற்ற மொழிகளில்  உள்ள பெயர்கள்

ஆங்கிலத்தில் - Liquorice, Licorice and Sweet wood

இந்தி-  முல்ஹட்டி , ஜோதிமத்

மராத்தி -  ஜெஷ்டமாதா

சமஸ்கிருதம்-  மதுகா ,யஷ்டி-மதுஹ்

தமிழ் -   அதிமதுரம்

                      


நமது ஒவ்வொரு வீடுகளில் உள்ள சமையல் அறைகளில்   சுக்கு , அதிமதுரம்  கட்டாயம்  இருக்க வேண்டும்.

அதுமதுரம் நம்  உணவு மற்றும் மருந்துகளில் எவ்வாறு இடம் பெறுகின்றன என்பதை அறியலாம்.

 

செரிமான பிரச்சனை, நோய் எதிர்ப்பு சக்திக்கு,சருமத்தை மென்மையாக வைத்திருக்க, மாதவிடாய் நின்ற பெண்களுக்கு ஏற்படும் மனஉளைச்சல், ஹார்மேனால்  உடலில் ஏற்படும் மாற்றங்கள், தூக்கமின்மை, இனப்பெருக்க வயதுடைய பெண்களில் கருவுறுதலை அதகரிக்க , சளி,இருமல், ஆஸ்துமா, வறட்டு இருமல், கக்குவான் , எடை இழைப்பு போன்ற வற்றை சரி செய்ய இது பெரிதும் உதவுகிறது என்பதில் ஐயமில்லை.

 

அதிமதுரத்தை எவ்வாறு உபயோகப்படுத்தலாம் என்று பார்போம்!

 

முதலில் அதிமதுரத்தை பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.

தொண்டை வலி

அதிமதுரம் - 1 ஸ்பூன்

தேன் - 1 ஸ்பூன்

இஞ்சி - 1 ன்சி

வெந்நீர் - 2 டம்ளர்

துளசி இலை - 15

புதினா இலை  - 10

தொண்டை வலி கஷாயம் - செய்முறை

ஒரு பாத்திரத்தில் தண்ணீரை ஊற்றி கொதிக்க வைத்து அதில் தோல் சீவிய இஞ்சி  பொடியாக  மற்றும் அத்தடன் துளசி இலை மற்றும் புதினா இலை சேர்க்க வேண்டும். அவற்றை கொதிக்க விட வேண்டும் .கடைசியாக அதிமதுர பொடியை சோ்த்த பின்  அதிகம் கொதிக்க விடாமல் அடுப்பை அணைத்து விடவும். அதிகம் கொதிக்க விட்டால்  கசப்பு தன்மை ஏற்படும்.

2 டம்ளர் தண்ணீர் ஒரு டம்பளர்  தண்ணீர் பெற்ற பின் இளம் சூட்டில் அருந்தினால் தொண்டைவலி மற்றும் தொண்டையில் ஏற்படும் புண்கள் குணமாகும்.

 

அதிமதுர  டீ

சளியை வெளியேற்ற இது மிகவும் பயனுள்ளதாக உள்ளது.

 

அதிமதுர டீ செய்முறை

​அதிமதுரம் - 2 டீஸ்பூன்

இஞ்சி - 2 ன்ச்

புதினா - அரை கைப்பிடி அளவு

சீரகம் - கால் டீஸ்பூன்

எலுமிச்சை -  பாதி

தண்ணீர் –1 ½ லிட்டர்

செய்முறை

 மேற் சொன்ன அளவுக்கு ஒரு பாத்திரத்தில் தண்ணீரை ஊற்றி கொதிக்க வைத்து அதில் தோல் சீவிய இஞ்சி  பொடியாக  மற்றும் அத்தடன் துளசி இலை மற்றும் புதினா இலை சேர்க்க வேண்டும். அவற்றை கொதிக்க விட வேண்டும். தண்ணீர் 1 –ல் 3 பங்கு குறையும் வரை  கொதிக்க விட வேண்டும்.அடுப்பை அணைத்த பின்பு  அதில் சிறிதளவு  எலுமிச்சை சாறு சேர்த்து  மிதமாக சூட்டில் அருந்துங்கள்

 அதிமதுர டீ –யை தொடர்ச்சியாக  அருந்தி வர  நெஞ்சு சலி, வறட்டு இருமல் , சலி  கொஞ்சம் கொஞ்சமாக சரியாகும் .

குறிப்பு அதிமதுர டீ யை ஒரு நாளைக்கு 2 கப் மேல் அருந்தாதீர்கள்!

மேலும்,

செரிமானத்ததைிற்கு

நோய் எதிர்ப்பு சக்தி

முகத்தில் உள்ள தோல் மிருதுவாக இருக்க

கரும்புள்ளியை குறைக்க

மூளையின் செயல்பாட்டை துண்டவும்,

நினைவாற்றலை அதிகரிக்கவும்,

   அதிமதுரம் பல ஆரோக்கிய நன்மைகளை அளித்தாலும், உங்களுக்கு பின்வரும் நிபந்தனைகள் இருந்தால் அல்லது குறிப்பிட்ட மருந்துகளை உட்கொண்டால் அதைத் தவிர்க்க வேண்டும்:

உயர் இரத்த அழுத்தம் , சிறுநீரக செயலிழப்பு ,வாய்வழி இரத்தச் சர்க்கரைக் குறைவு மருந்துகள் அல்லது இன்சுலின் எடுத்துக்கொள்பவர்கள்,கல்லீரல் அல்லது இருதய நோய்களால் அவதிப்படுபவர்கள். இதை தவிர்த்து விடுங்கள்

எனவே, அதிமதுரம் ஆரோக்கிய நன்மைகள் பற்றிய இந்த வழிகாட்டி உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகிறேன். நீங்கள் தொடர்ந்து அதிமதுரம் எடுக்கத் தொடங்குவதற்கு முன், உங்களுக்கு ஏதேனும் அடிப்படை மருத்துவ நிலை இருந்தால், உங்கள் மருத்துவரை அணுக மறக்காதீர்கள்.


Post a Comment

புதியது பழையவை

TELEGRAM ALERT