வீட்டிலிருந்தபடியே பட்டா மாறுதலுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் விண்ணப்பிக்கும் முறை முழுவிபரம்

 
Online-ல் பட்டா  மாற்ற  விண்ணப்பிக்கும்  வழிமுறைகள்

 

பொது மக்களின் நலன் கருதி  பல அரசின் சேவைகள்  ஆன்லைன் முறையில் கொண்டு வரப்பட்டுள்ளன.அவற்றின் மிக முக்கியமான ஆன் லைன்லில் பட்டா மாற்றம் செய்வது பற்றி அறிவோம்.!!!!

அரசின்சேவைகளைபொதுமக்கள்எளிதாகபெறும்வகையில்பலதுறைகளின்சேவைகள்ஆன்லைன்முறையில்கொண்டுவரப்பட்டுள்ளன.

கடந்த ஆகஸ்ட் மாதம் தமிழக  முதலமைச்சாரல்  பட்டா மாறுதல் சம்மந்தமாக பொதுமக்கள்  வீட்டில் இருந்து கொண்டே ஆன்லைனில் நேரடியாக விண்ணப்பம் செய்யும் வசதியை (சேவையை) தொடங்கி  வைக்கப்பட்டது.

 

பட்டா மாறுதல் என்பது இரு வகைப்படும்

·       உட்பிரிவற்ற பட்டா மாறுதல்

·       உட்பிரிவுடன் கூடிய பட்டா மாறுதல்

 

 

உட்பிரிவற்ற பட்டா மாறுதல்

உட்பிரிவற்ற பட்டா மாறுதல் என்பது  ஒருவர் தன் பெயரில்  பட்டா உள்ள முழு நிலத்தை முழுவதுமாக  விற்பானை செய்தால் அது வே உட்பிரிவற்ற பட்டா மாறுதல் எனப்படும்.

இது பத்திரப்பதிவு துறையிலிருந்து வருவாய் துறைக்கு விவரங்கள் அனுப்ப்ப்பட்ட உடன்  உடனடியாக பட்டா மாறுதல் செய்யப்படும்.

உட்பிரிவுடன் கூடிய பட்டா மாறுதல்

உட்பிரிவுடன் கூடிய பட்டா மாறுதல் என்பது  பட்டா உள்ள நிலத்தை பகுதி பகுதியாக விற்பனை செய்தால்  அதுவே உட்பரிவுடன் கூடிய மாறுதல் எனப்படும்.

இது தற்போது வரை இ- சேவை மூலம் விண்ணப்பிக்கப்பட்டு வந்தது அதனால் பொது மக்கள் நிறைய இடையுறுகளை சந்திக்க வேண்டி இருந்த்து. சரியான ஆவணங்கள் கொண்டு செல்லாவிட்டால்  மீண்டும் அடுத்தநாள் செல்ல வேண்டி இருந்த்து.  இதனை தவிர்க்கும் பொருட்டு  பொதுமக்களின் நலன் கருதி தமிழக அரசால் பொது மக்கள் எந்நேரத்திலும் எந்த இடத்திலும்  அல்லது வீட்டில் இருந்தப்படியே விண்ணப்பிக்கும் முறையை அறிமுகப்படுத்தியுள்ளது.

 

விண்ணப்பம் செய்யும் இணைதள முகவரி

https://tamilnilam.tn.gov.in/citizen

 

இந்த இணையதளத்தில்  நுழைந்தவுடன்·       பெயர்

·       செல்போன்எண்.

·       இ-மெயில் முகவரி

·       இவற்றை கொடுத்து முதலில் தாங்கள்  பதிவு செய்து கொள்ள வேண்டும்.

 

அடுத்து

·      பட்டா மாறுதல் செய்ய வேண்டிய

·      உட்பிரிவற்ற பட்டாமாறுதல்

·      உட்பிரிவுடன் கூடிய பட்டா மாறுதல்

·      இதில்  தாங்களுக்கு  தேவையானவற்ற  கிளிக்(தேர்வு) செய்யவும்

·      அதன் பின் நிலத்தின் விவரங்கள்  கேட்டகப்பட்டிருக்க அவற்றின் உள்ளீடு செய்யவும்

அவை

·      மாவட்டம்

·      தாலுகா

·      கிராம்ம்

·      சர்வே எண் மற்றும் சப்டிவிஷன் எண். ஆகியவற்றை உள்ளீடு செய்ய வேண்டும்.

·      அதன் பின்

·      தங்களின் நிலம் சம்மந்தமான ஆவணங்களை Upload செய்ய வேண்டும்.

 

கட்டணம்

·      உட்பிரிவற்ற பட்டாமாறுதல்  ரூ.60

·      உட்பிரிவுடன் கூடிய பட்டா மாறுதல் ரூ.460

·      கட்டணம்  ஆன்லைனில் செலுத்த வேண்டும்

 

தங்களது விண்ணப்பம் சம்மந்தப்பட்ட தாசில்தார்ருக்கு செல்லும். அவர் மூலம்கிராமநிர்வாகஅலுவலர், வருவாய்ஆய்வாளர் ஆகியோர் கள ஆய்வு நடத்தி பட்டா மாறுதல் செய்யப்படும். உரிய காரணங்கள் இல்லாமல் உங்களது மனு தள்ளுபடி செய்ய மாட்டார்கள்

 

பட்டாமாறுதலுக்கு தேவைப்படும் ஆவணங்கள் (இவற்றில் ஏதாவது ஒன்று)

 1. கிரையப்பத்திரம்.

2. செட்டில்மெண்ட்பத்திரம்

3. பாகப்பிரிவினைபத்திரம்

4. தானப்பத்திரம்

 5. பரிவர்த்தணைபத்திரம்

6. விடுதலைபத்திரம்

மற்ற இதரஆவணங்கள் (ஏதாவதுஒன்று)

ஆதார்அட்டை,

பான்அட்டை,

ஓட்டுனர்உரிமம்,

ரேஷன்அட்டை,

பாஸ்போர்ட்,

 வாக்காளர்அடையாளஅட்டை

குடியிருப்புஆவணங்களில் (ஏதாவதுஒன்று)

ஆதார்அட்டை,

தொலைப்பேசிரசீது,

மின்கட்டணம்,

சமையல்எரிவாயுரசீது,

பாஸ்போர்ட்,

வாக்காளர்அடையாளஅட்டை.


Post a Comment

புதியது பழையவை

TELEGRAM ALERT