கொரோனாவால் உயிரிழந்தவர்கள் குடும்பம் நிதி உதவி ரூ.50000/-பெறுவதற்கு தேவையான ஆவணங்கள்

 

கொரோனாவால் உயிரிழந்தவர்கள்  குடும்பம் நிதி உதவி ரூ.50000/-பெறுவதற்கு தேவையான ஆவணங்கள்


கொரோனாவால் உயிரிழந்தவர்கள்  குடும்பம் நிதி உதவி ரூ.50000/-பெறுவதற்கு தேவையான ஆவணங்கள்

தமிழக அரசின் சார்பில் கொரோனா பெருந்தொற்றினால் உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு ரூ.50,000 நிதி உதவி வழங்க அரசு ஆணை  கடந்த 07.12.2021 அன்று  வெளியிட்டு இருந்த்து.

அதனப்படையில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தில் உள்ள ஒரு வாரிசுதார்களுக்கு  ரூ.50,000?- வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளது.

கொரேனா நிதியுதவி பெறுவதற்கு எளிமையாக்கும் வகையில் தமிழக இணையத்தில் www.tn.gov.in சென்று விண்ணப்பிக்கலாம் என்று தெரிவித்துள்ளது. அனைவரும் பயனடையும் வகையில்  விண்ணப்பித்தற்கான 3 வழிமுறைகள் கொடுக்கப்பட்டுள்ளது. தங்களுக்கு எது எளியமையாக உள்ளதோ அதன் அடிப்படையில் விண்ணப்பிக்கலாம்.

கொரோனாவால் உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு ரூ.50,000 நிதி உதவி பெறுவது எப்படி?

கொரோனாவால் உயிரிழந்தவர்கள்  குடும்பம் நிதி உதவி பெறுவதற்கு எங்கு விண்ணப்பது?

     I.     அதற்கு தேவையான ஆவணங்கள்  என்னென்ன?

     II.     அரசு இணைதளத்தில்  விண்ணப்பிக்கலமா?

    III.     அல்லது நேரடியாக விண்ணப்பிக்கலமா?

   IV.     இணையதளத்தில் விண்ணப்பிக்க தெரியதவாகள் என்ன செய்வது?

    V.     அதற்கான வழிமுறைகள் என்னென்ன?

 

முதலில் அதற்கு தேவைப்படும் ஆவணங்கள் என்னென்ன என்பதை காண்போம்.

1.   இறந்தவரின் ஆதார் கார்டு நகல்

2.   இறந்தவரின் covid -19 (Postive)சான்றின் நகல்

3.   இடுகாட்டில் கொடுத்த சான்றின் நகல்

4.   வாரிசுதார்ரின்  ஆதார் அட்டை மற்றும்

5.   வங்கி கணக்கு புத்தகம் முதல் பக்கம் நகல்

6.   இறப்புச்சான்றின் நகல்

மேற்கண்ட ஆவணங்களை கொண்டு 3 முறைகளில் விண்ணப்பிக்கலாம்

1.   நேரடியாக தமிழக அரசின் இணையதளத்தில் www.tn.gov.in  விண்ணப்பிக்கலாம்


2.   இ.சேவை மையத்தில் சென்று விண்ணப்பிக்கலாம்

3.   இ.சேவை மையத்தில் விண்ணப்பித்த நகல் மற்றும் மேற்சொன்ன ஆவணங்களை எடுத்துக்கொண்டு தங்களின் தாலுக்கா அலுவலகங்களுக்கு சென்று ஆவணங்களின் நகல்களை சமர்பிக்கலாம்.

 

 

     I.     நேரடியாக தமிழக அரசின் இணையதளத்தில்  விண்ணப்பிக்கலாம்


தமிழக அரசின் இணைதளம் www.tn.gov.in  என்ற இணைதளத்தில் செல்ல வேண்டும்.




வலது பக்கத்தில்  what’snew”வாட்ஸ் நியூ” என்ற இடத்தில் “Ex-graita  for Covid-19  என்ற விண்ணப்பத்தின் இணைப்பை கிளிக் செய்ய வேண்டும்.



கிளிக் செய்த உடன் நேரடியாக விண்ணப்பம்  திரையில் வெளிப்படும்.

உரிமைக்கேரியவரின் விவரங்கள்

 

 


      இறந்தவரின் அடிப்படை விவரங்கள்

சட்டப்புபூர்வ விவரங்கள்

 

 

இறந்தவரின் நிரந்தர முகவரி

தகவல் தெரிவிக்க வேண்டிய முகவரி

 

 

சிகிச்சை அளிக்கப்பட்ட மருத்துவமனை முகவரி

மருத்துவமனை முகவரி

 

 

மேற்சொன்ன ஆவணங்களை கொண்டு அதில் விண்ணப்பிக்கலாம்.

அனைத்து விவரங்களை உள்ளீடு செய்த பின் Submit என்ற கிளிக் செய்யவும்.

 

நீங்கள் விண்ணப்பத்திதற்கான  அப்ளிக்கேஷன்  எண். வரும் அதனை பிரதி நகல் எடுத்துக்கொள்ளவும்.

 

     II.     இ.சேவை மையத்தில் சென்று விண்ணப்பிக்க

 

தங்கள் ஊரில் உள்ள இ-சேவை மையங்களுக்கு சென்று  மேற்சொன்ன ஆவணங்களை எடுத்து சென்று விண்ணப்பக்கலாம்.

 

இந்த செய்தியை தங்களுக்கு தெரிந்தவர்களக்கோ அல்லது கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தெரியாமல் இருந்தாலே, அல்லது அவர்களுக்கு எவ்வாறு விண்ணப்பது என்று தெரியாமல் இருந்தாலே இச்செய்தியை படிக்கும் நீங்கள் யாரேனும் ஒருவருக்காவது  வழிகாட்டுங்கள்  மற்றும் பகிருங்கள் !

 


Post a Comment

புதியது பழையவை

TELEGRAM ALERT