தொலைத்த ஆவணங்களை திரும்பப்பெறுவது எப்படி ? ஆவணங்கள் தொலைந்தால் ஆன்லைனில் எப்படி புகார் அளிக்கலாம்?

 நாம் வெளியிடங்களுக்கு  செல்லும் பொது நம்முடைய ஆவணங்களை தொலைத்து விட நேரிடலாம். தொலைத்த ஆவணங்களை திரும்பப்பெறுவது எப்படி என்று அறிந்து நாம் அறிந்து கொள்ள வேண்டும்  இது ஒரு பயனுள்ள தகவல் மறக்காமல் படித்து விட்டு நண்பர்களுடன் பகிரவும்.


1.இன்ஷூரன்ஸ் பாலிசி!


பாலிசியை விநியோகம் செய்த கிளையை அணுகி  முகவரிச் சான்று, புகைப்பட அடையாளச் சான்றின் நகல்களில் நோட்டரி பப்ளிக் சான்றொப்பம் இடப்பட்டவை மற்றும் பிரீமியம் செலுத்தியதற்கான ஏதாவது ஒரு ரசீது நகல். ஆகியவற்றை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும் 


2.மதிப்பெண் பட்டியல்!


பள்ளி  மற்றும் கல்லூரிகாண பள்ளித் தலைமை ஆசிரியர் மற்றும் மாவட்ட கல்வி அதிகாரியை அணுக வேண்டும் 

விண்ணப்பிக்க இணைக்க  வேண்டிய ஆவணங்கள்   மதிப்பெண் பட்டியல் நகல், பள்ளி மாற்றுச் சான்றிதழ்,POLICE FIR ,கட்டணம் செலுத்திய ரசீது. முன்பு படித்த பள்ளி/நிறுவனத்தின் மூலம் விண்ணப்பம் வாங்கி  பூர்த்தி செய்து தாசில்தாரிடம் கையப்பம் வாங்க வேண்டும். அந்த விண்ணப்பத்தோடு ஒரு கடிதம் மற்றும்ஆவணங்களை இணைத்து  சேர்த்து மாவட்ட கல்வித்துறை அதிகாரிக்கு அனுப்ப வேண்டும். 


3. தொலைந்துபோன ரேஷன் கார்டு எப்படி வாங்குவது ? 

கிராமத்தில் உள்ள வட்டார உணவுப் பொருள் வழங்கு அலுவலர் மூலம் வாங்கலாம்

 நகர்ப்பகுதி உணவுப் பொருள் வழங்கு துறை மண்டல உதவி ஆணையாளர் மூலம் வாங்கலாம்

 காணாமல்போன குடும்ப அட்டையின் நகல் அவரிடம் விண்ணப்பிக்க வேண்டும்

 இதனை விசாரணை செய்து புது அட்டை வழங்க ஏற்பாடு செய்வார்


4. தொலைந்துபோன தொலைந்து போன டிரைவிங் திரும்ப பெறுவது எப்படி ? 


மாவட்ட போக்குவரத்து அதிகாரியிடம் இதனை விண்ணப்பிக்கலாம் பழைய லைசென்ஸ் நகல் வைத்து விண்ணப்ப கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்கலாம் இதற்கு காவல்துறை FIR (NON TRACABLE ))  சான்றிதழ் வாங்கி இருக்க வேண்டும்


5. தொலைந்து போன பான் கார்டு பெறுவது எப்படி ?


பான் கார்டு வாங்கித் தரும் அங்கீகரிக்கப்பட்ட ஏஜென்டுகள் மூலமாகவும் அல்லது வருமான வரித்துறையில் அலுவலகத்தின் மூலமும் விண்ணப்பிக்கலாம்


6. தொலைந்துபோன பங்குச் சந்தை ஆவணம் பெறுவது எப்படி ?


அந்த நிறுவனத்தின் பதிவாளரிடம் அணுகி விண்ணப்பிக்கலாம் இதற்கு காவல் துறை சான்றிதழ் பங்கு ஆவணத்தின் நகல் ஆகியவை வேண்டும் இதற்கு விண்ணப்பித்த 45 நாட்களிலிருந்து 90 நாட்களுக்குள் திரும்ப பெறலாம்


7. கிரைய பத்திரம் எப்படி திரும்பப் பெறுவது ?


பத்திர பதிவு அலுவலகத்தில் உள்ள துணை பதிவாளரை அணுகி விண்ணப்பிக்கலாம் காவல் துறையின் சான்றிதழ் பத்திரிகையில் வெளியிடப்பட்ட விளம்பரம் யாரிடமும் ஆட்சேபனை வரவில்லை என்பதற்கான நோட்டரி பப்ளிக் சான்றிதழ் சர்வே எண் ஆகியவற்றை இணைக்க வேண்டும் இதற்கு கட்டணம் செலுத்த வேண்டும்


8. டெபிட் கார்டு கிரெடிட் கார்டு திரும்ப பெறுவது எப்படி ? 

சம்பந்தப்பட்ட வங்கியின் கிளை மேலாளரை அணுகி நாம் இதற்கு விண்ணப்பிக்க வேண்டும் விண்ணப்பித்த 15 நாட்களுக்குள் நமது வீட்டிற்கு கார்டு திரும்ப அனுப்பி வைக்கப்படும் .கட்டணம் வசூலிக்கப்படும்


9. மனைப் பட்டா திரும்ப பெறுவது எப்படி ?


வட்டாட்சியர் அலுவலகத்தில் விண்ணப்பிக்க வேண்டும் முதலில் தாசில்தாரிடம் விண்ணப்ப மனுவை தரவேண்டும் அவரின் பரிந்துரையின் பேரில் விஏஓ கிராம நிர்வாக அதிகாரி ஒப்புதல் பெற வேண்டும் அதன் அடிப்படையில் தாசில்தார் அலுவலகத்தில் விண்ணப்பித்தால் நகல் பட்டா கிடைத்துவிடும்


10. காணாமல் போன பாஸ்போர்ட்டை திரும்ப பெறுவது எப்படி ?


மண்டல பாஸ்போர்ட் அலுவலகங்களில் இதற்காக விண்ணப்பிக்கவேண்டும் பழைய பாஸ்போர்ட் நகலுடன்  விண்ணப்பம் செய்து விண்ணப்பிக்க வேண்டும் காவல் துறை சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்

20 ரூபாய் முத்திரைத்தாளில் விவரங்களை பதிவு செய்து நோட்டரி பப்ளிக் ஒருவரின் கையெழுத்து பெற்று பாஸ்போர்ட் அலுவலகத்தில் விண்ணப்பிக்க வேண்டும் இதன் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டு நமக்கு பாஸ்போர்ட் அனுப்பி வைப்பார்கள்
மேற்கண்ட ஆவணங்கள் தொலைந்தால் காவல் நிலையத்திற்கு நேரடியாக சென்று புகார் அளித்து வந்த நிலையில் தற்போது அந்த முறை ஆன்லைனில் மாற்றப்பட்டுள்ளது இதற்கு பின்வருமாறு நாம் புகார் பதிவு செய்யலாம் அதிகாரப்பூர்வ இணையதளமான கீழ்கண்ட முகவரிக்கு

 https://eservices.tnpolice.gov.in/CCTNSNICSDC/Index?17  

சென்று LDR (LOST DOCUMENT REPORT) 

அதை கிளிக் செய்து அதில் ரிப்போர்ட் என்ற பட்டனில் சரியான தகவல்களை பதிவு செய்து பின்பு நாம் அதனை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்

Post a Comment

புதியது பழையவை

TELEGRAM ALERT