இன்று (08.06.2021) கோவை மாவட்ட முக்கிய செய்தித் தொகுப்பு

 


1. பொள்ளாச்சியில் அரசாங்கம் அறிவித்த நேரத்தை மேலும் குறைத்தது  ஜூன் 7ஆம் தேதி முதல் 14ஆம் தேதி வரை காலை 6 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மட்டுமே செயல்பட வேண்டும் என்று பொள்ளாச்சி வியாபாரிகள் சங்கம் முடிவு செய்யப்பட்டுள்ளது.


2.கோவையில் கொரோனாவால் இறந்தவர்களை நல்லடக்கம் செய்வதற்கென கோவை சி.எஸ்.ஐ. ஆலயம் மற்றும் ஜீவசாந்தி  அறக்கட்டளை இணைந்து, கோவை பாப்பநாயக்கன் பாளையம் பகுதியில் உள்ள சி.எஸ்.ஐ. ஆரம்பப் பள்ளியில் மே 30 ஆம் தேதி உதவி தொடர்பு மையம் துவங்கப்பட்டுள்ளது.உதவிக்காகத் தேவைப்படுவோர் 99524 42266 மற்றும்  98941 33331 அழைக்கலாம்  : தலைவர் சலீம்


3.கோவையில் கொரோனா சிகிச்சை மையத்தில் தற்காலிக செவிலியர் பணிகளுக்கான நியமன ஆணையை  ஜூன் 7-ஆம் தேதி கோவை மாநகராட்சி அலுவலகத்தில், நகர்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு வழங்கினார்.


4.கோவை மாநகராட்சி பகுதிகளில் மட்டும் 2.01 லட்சம் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது – அமைச்சர் கே.என்.நேரு


5.கோவையில் பொதுமக்கள் வாட்ஸ் அப் வீடியோ கால் மூலம் புகார் தெரிவிக்கும் சேவை அறிமுகம்.வாட்ஸ்அப் மூலம் புகார் தெரிவிக்க இயலாதவர்கள் கொடுக்கப்பட்டுள்ள 77 08 100 100 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு தங்களது புகார்களை தெரிவிக்கலாம்:மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வ நாகரத்தினம்


6.மத்திய ஜபல்பூரிலிருந்து கோயம்புத்தூர் வரை வாராந்திர சிறப்பு ரயில் (02198) 11 முதல் முதல் அடுத்த மாதம்  30 வரை இயக்கப்படும் . இந்த ரயில் வெள்ளிக்கிழமைகளில் இரவு 11.30 மணிக்கு ஜபல்பூரிலிருந்து புறப்பட்டு ஞாயிற்றுக்கிழமைகளில் மாலை 5.10 மணிக்கு கோயம்புத்தூர் வந்து சேரும்.


7.கோவையில் 2 வாரங்களுக்கு பிறகு ஊரடங்கில் தளர்வுகள் அமல்

அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் திறப்பு

வாகன போக்குவரத்து அதிகரிப்பு


8 .ஒரிசாவின் ரூர்கேளவில் ரயில்  வழியாக மருத்துவ மருந்து ஆக்சிஜன் கோயம்புத்தூருக்கு கொண்டு வரப்படுகிறது. அதன்படி, 32.38 மெட்ரிக் டன் மருத்துவ ஆக்ஸிஜனை ஏற்றிய 2 டேங்கர் லாரிகள் நேற்று மாலை ரயிலில் கோயம்புத்தூர் மமதுக்கரை  ரயில் நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டன.


Post a Comment

புதியது பழையவை