நவகிரக சுற்றுலா -ஆன்மீக பக்தர்களுக்கு தமிழக அரசு வெளியீட்டுள்ள ஒர் நற்செய்தி

 


ஆன்மீக பக்தர்களுக்கு   தமிழக அரசு வெளியீட்டுள்ள  ஒர் நற்செய்தி!! 

நவகிரக சுற்றுலா

பயணிகளின்   நீண்ட நாள் கோரிக்கையான  நவகிரக  சுற்றுலா செல்வதற்கு தனி பேருந்து இயக்கப்பட வேண்டும் என்பதே. 

அதனை கருத்தில் கொண்டு கும்பகோணத்தில் உள்ள நவகிரக சுற்றுலா செல்ல  ஆன்மீக பக்தர்களுக்காக  தமிழக அரசு பேருந்து மூலம் ஒரே நாளில் நவகிரக கோவில்களுக்கு செல்ல  தனியாக பேருந்து ஏற்பாடு செய்துள்ளது.

  வார விடுமுறை நாட்களான சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை களில் ஆன்மீக நவகரக சுற்றுலா செல்லவதற்கு கும்பகோணம் புதிய பேருந்து நிலையத்திலிருந்து  காலை 6.00 மணிக்கு  9 நவகரக கோயில்  சென்று மீண்டும் இரவு  8.00 கும்கோணம் பேருந்து நிலையத்தை வந்தடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

               மேலும்  யாத்தியர்களின் சிரமத்தை குறைக்க முன் பதிவு செய்துக்கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 இத்திட்டம் வரும் பிப்ரவரி மாதம்  24.02.2024 மற்றும் 25.02.2024  ஆகிய தேதிகளில் துவங்கப்படுகிறது.

டிக்கெட் முன்பதிவு செய்ய  www.tnstc.in  என்ற இணையதள முகவரியில் பதிவு செய்து கொள்ளலாம்.நவகிரக சுற்றுலா செல்ல ஒரு நபருக்கு ரூ.750/- பயண கட்டணமாக  நிர்ணயித்து உள்ளது.


 

பயண அட்டவணை விவரம் பின்வருமாறு :

காலை  6.00

கும்பகோணம் புதிய பேருந்து நிலையத்திலிருந்து

திங்களுர்  சந்திரன் கோயில் தரிசனம்காலை 7.15

ஆலங்குடி குரு பகவான் கோயில்   தரிசனம்காலை உணவு இடைவேளை


காலை 9.00

திருநாககேஸ்வரம்  ராகு  பகவான் கோயில் தரிசனம்காலை 10.00

சூரியன்   பகவான் – சூரியானர் கோவில் தரிசனம்காலை 11.00

கஞ்சனூர்  சுக்கிரன் கோவில் தரிசனம்காலை 11.30

வைத்தீரன்கோவில்  செவ்வாய்  பகவான் தரிசனம்12.30 முதல் 1..30 வரை

மதிய  உணவு இடைவேளை


மாலை  2.30

திருவெண்காடு புதன் பகவான் தரிசனம்மாலை 4.00

கீழ் பெரும்பள்ளம்  கேது பகவான் தரிசனம்

           


மாலை 4.45

திருநள்ளாறு சனி பகவான் தரிசனம்

             


மாலை 6.00

திருநள்ளாறில் இருந்து புறப்பட்டு இரவு  8.00

கும்பகோணம் புதிய பேருந்து நிலையத்தை வந்தடையும்.


அனைவரும் நவகிரக கடவுள்களின்  அருள் பெறுவோம்! நன்றி!!

இத்தகவல் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால்  ஆன்மீக  பக்தர்களுக்கு பகிரவும்!!


நவகிரக ஆன்மீக சுற்றுலா செல்வதற்கு முன்பதிவு செய்ய 

Post a Comment

புதியது பழையவை

TELEGRAM ALERT