அரசுப் பணியாளர்கள் சங்கங்களின் கோரிக்கைகள் தொடர்பாக சட்டப்பேரவை விதி எண் 110-ன் கீழ் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் அறிக்கை முழு விபரம்


 

அரசு ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட காலம், பணிநீக்க காலம் வேலை நாட்களாக கருதப்படும்.

சத்துணவு சமையல் ஊழியர்களின் ஓய்வுபெறும் வயது 58-ல் இருந்து 60 ஆக உயர்த்தப்படும். அடுத்த ஆண்டு ஜனவரி 1 முதல் அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி வழங்கப்படும். கடும் நெருக்கடியான சூழல் இருப்பினும் அகவிலைப்படி அமல்படுத்தப்படும். பணியின் போது காலமான அரசு ஊழியர்களின் வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையில் பணி நியமனம் செய்வதில் உள்ள சிக்கல்களை தீர்க்கும் வகையில் வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்படும். அரசு பள்ளிகளில் காலியாக உள்ள இளநிலை உதவியாளர் பணியிடங்களுக்கு டி.என்.பி.எஸ்.சி மூலம் விரைவில் தேர்வு நடத்தப்படும். ஓய்வு பெறும் நாளில் அரசு பணியாளர்கள் தற்காலிக பணி நீக்கத்தில் வைக்கும் நடைமுறை தவிர்க்கப்படும் - முதலமைச்சர்.

Post a Comment

புதியது பழையவை

TELEGRAM ALERT