கொடைக்கானலில் ஆச்சரியம் தரும் “மூலிகை கிராமம் என்ன காரணம்

                           கொடைக்கானலில் ஆச்சரியம் தரும் “மூலிகை கிராமம்

 என்ன காரணம்....!

·       கொரோனாவா? அப்படின்னா என்ன? என்று கேட்கும் மூலிகை கிராம மக்கள்..!

·       யார் இவர்கள்?

·       எந்த ஊரில் இருக்கிறார்கள்!

·       என்ற கேள்விகளுக்கான விடை!

·       நம்ம தமிழ்நாட்டில் தான்.. 

அதுவும் கொடைக்கானலில்  தான் இருக்கிறார்கள்..!

வெள்ளகவி கிராமம்..!

 

   மலைகளின் இளவரசியாக போற்றப்படும்  கொடைக்கானல்  உருவாவதற்கு முக்கியமான காரணமே இந்த வெள்ளகவி கிராமம் தான்.. இந்த கிராமம் 400 வருஷங்களுக்கு முன்பு தோன்றியதாக கூறப்படுகிறது . ஒரு சிறிய கிராமம்தான்.. சுமார் 150 குடும்பங்கள்  இங்கு வாழ்ந்து வருகிறார்கள் மொத்தமாக பார்த்தால் 400க்கும் குறைவான மக்கள்தான் வாழ்ந்து வருகின்றனா்.

 

கொடைக்கானலில் இந்த கிராமம் எங்கு உள்ளது?

 

   கொடைக்கானலில் நடுக்காட்டில் இந்த கிராமம் உள்ளது. இந்த ஊருக்கு சாலைவசதிகள் எதுவும் இல்லை. காட்டுப்பகுதியில் இருக்கும் ஒத்தையடி பாதையில் தான் செல்ல வேண்டும். வெள்ளகவி கிராமத்திலிருந்து பெரியகுளம் 6 கி.மீ. துாரத்திற்கு நடத்து செல்ல வேண்டும்.

 

                                                                                 

வெள்ளகவி கிராமம் முழுவதும்  மூலிகை நறுமணம் வீசிக்கொண்டே இருக்க காரணம் என்ன தெரியுமா?

       கிராம மக்களின் முக்கிய தொழில் மலைப்பயிர்களை விளைவிப்பது தான். அவை ஏலக்காய் , காபி, மிளகு , தேயிலை அவக்கோடா  போன்றவை. விளைவித்த பயிர்களை குதிரையின் மீது கட்டி சந்தையில் கொண்டு போய் விற்றுவருகிறார்கள். வெள்ளகவி கிராமம் அழகு வா்ணிக்க முடியாத அளவில் உள்ளது. அதனால் இங்கு வரும் சுற்றுலா பயணிகள் இங்கேயே தங்கிவிடுவார்கள் .இதுவும் இந்த கிராமத்தின் இன்னொரு சிறப்பு.

கிராம காவல் தெய்வங்கள்

 

   காவல் தெய்வங்கள் இந்த கிராமத்தை சுற்றி நிறைய இருப்பதால் செருப்புகள் போடாமல் தான் கிராம மக்கள் கிராமங்களுக்குள் சென்று வருகிறார்கள். இன்று எந்த நோயின் தாக்கமும் இந்த கிராமத்திற்குள் வந்ததில்லை. நோய்கள் எல்லாவற்றிக்கும் மூலிகை வைத்தியம் கைவசம் வைத்துள்ளார்கள்.

ஆரோக்கியமான உணவை உண்டு வாழும் மக்கள்

   இயற்கை உரம் போட்ட சத்தான காய்கறிகள் மற்றும் கிழங்கு வகைகள் உண்டு வாழ்வதாலும், மூலிகை நிறைந்த காட்டுக்குள் வாழ்வதாலும் இவா்களுக்கு நோய்தொற்று  ஏற்படவில்லை. இவா் அனைவரும் மாஸ்க் அணியமால் இயற்கையோடு இணைந்தும், கொரோனா தொற்று பயம் இல்லாமல் நிம்மதியாக வாழ்ந்து வருகிறார்கள். தனது விவசாய தொழில் ஹாயாக பார்த்து கொண்டு வாழ்கிறார்கள்.

Post a Comment

புதியது பழையவை

TELEGRAM ALERT