தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டுத் துறையில் வேலைவாய்ப்பு 2024

 


கலை பண்பாட்டுத் துறையில் வேலை

மாற்றுத்திறனாளி - சிறப்பு ஆட்சேர்ப்பு அறிவிப்பு!!

          கலை பண்பாட்டுத் துறையின் கீழ் செயல்படும் தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரிகளில் காலியாக விரிவுரை யாளர் பணியிடங்களில் இனசுழற்சி முறைப்படி நேரடி நியமனத்தின் மூலம் மாற்றுத்திறனாளிகள் தேர்வு செய்யப்பட்டு நிரப்பப்பட உள்ளனர்.

பதவியின் பெயர்& ஊதிய விகிதம் (ரூ.)


விரிவுரையாளர்

(குரலிசை, தவில்,  வயலின், புல்லாங்குழல்)

சம்பளம் - ரூ. 36200-133100/-

 

பணியிடம் –

தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரி


இனசுழற்சி முறை.

பட்டியல் பிரிவினர் (SC)

பட்டியல் பிரிவினர் (அருந்ததியர்) (SCA)* / பட்டியல் பிரிவினர் (SC)

மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (MBC)

பிற்படுத்தப்பட்டவகுப்பினர் (BC)

 

காலியிடம் - 04

 


*பட்டியல் பிரிவினரில் தகுதியுடைய அருந்ததியர் எவரும் இல்லாத நிலை ஏற்படின், பிற பட்டியல் | பிரிவினருக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

(வயது வரம்பு :- அனைத்து விரிவுரையாளர் பதவிகளுக்கும் 01.07.2024 அன்று 30 அகவை நிறைவு செய்திருக்க வேண்டும் /அதிகபட்ச வயது வரம்பு 55)

கல்வித் தகுதி :-

i.பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

ii.நியமன அலுவலரால் வரையறுக்கப்பட்டவாறு குரலிசை / கருவியிசையில் பத்து ஆண்டுகளுக்கு குறையாமல் தொழில்முறை பணியறிவு பெற்றிருத்தல் வேண்டும்.

iii. நியமன அலுவலரின் கருத்தின் படி தொழில் முறையில் நல்லறிவு பெற்றிருத்தல் வேண்டும். வரம்புரையாக தொழில் முறையில் நல்லறிவு பெற்றிருப்பதுடன், மாநிலத்தில்: உள்ள பல்கலைக்கழகம் / அரசால் ஏற்பளிக்கப்பட்ட கலைக் கல்வி நிறுவனம் மூலமாக குரலிசை / கருவியிசையில் பட்டம் அல்லது பட்டயம் அல்லது தலைப்பு பெற்றவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

வரம்புரையாக தவில் விரிவுரையாளர் பணியிடத்திற்கு நியமனம் செய்யப்படுவதற்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் இருக்கப் பெறாத நிலையில் நியமன அலுவலரின் கருத்தின்படி குறைவான கல்வித் தகுதி வாய்க்கப்பெற்றோர் உரிய கலைத் துறையில் தொழில் முறையில் நல்லறிவு பெற்று இருப்பின் அவர்கள் நியமனம் செய்யப்படலாம்.

| நிபந்தனைகள்:-

1.     தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் தங்களது விண்ணப்பத்தினை கீழ்க்காணும் மாதிரி விண்ணப்பப் படிவத்தில் உள்ளவாறு வெள்ளைத் தாளில் தெளிவாகக் குறிப்பிட்டு எழுதி அனுப்ப வேண்டும்.

2.     விண்ணப்பங்கள் 2 படிகளில் உரிய இணைப்புகளுடன் 21.10.2024 அன்று பிற்பகல் 05.45 மணிக்குள்

 

இயக்குநர், கலை பண்பாட்டு இயக்ககம்,

தமிழ் வளர்ச்சி வளாகம்,

2ஆம் தளம், தமிழ்ச் சாலை, எழும்பூர். சென்னை -600 008. என்ற முகவரிக்கு கிடைக்குமாறு நேரிலோ அல்லது அஞ்சல் மூலமாகவோ அனுப்பி வைக்க வேண்டும்,

 

மாதிரி விண்ணப்பப் படிவத்தில் உள்ளவாறு விவரங்கள் முழுமையாக பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பங்கள் / குறிப்பிட்ட காலக்கெடுவிற்குப் பின்னர் பெறப்படும் விண்ணப்பங்கள் / தகுதியில்லாத விண்ணப்பங்கள் கண்டிப்பாக நிராகரிக்கப்படும். எந்த ஒரு விண்ணப்பத்தையும் எவ்வித காரணமும் கூறாமல் நிராகரிக்கும் அதிகாரம் நிர்வாகத்திற்கு உண்டு.

3.இயக்குநர், கலை பண்பாட்டுத் துறை விரிவுரையாளர் பணியிடத்திற்கான மாதிரி விண்ணப்பப் படிவம்

1.பெயர்:

2. பாலினம்:

3.தந்தை / கணவர் / பாதுகாவலர் பெயர்:

4.| பிறந்த தேதி & வயது (01.07.2024 அன்று):

5.முழு முகவரி:

6.தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி / கைபேசி எண்.:

7.மதம்

8.வகுப்பு / இனம் / உட்பிரிவு (டிக் செய்யவும்)

9.கல்வித் தகுதி:

10.இசைக் கல்வித் தகுதி:

11. அரசு மற்றும் தனியார் இசைக் கல்வி நிலையம் / திருக்கோவில்களில் பணியாற்றிய விவரம்:

.பி. / மி.பி.. /பி..:

உண்மை,

விண்ணப்பத்தில் குறிப்பிட்டுள்ள விபரங்கள் அனைத்தும் என் அறிவுக்கு எட்டியவரை தேர்விற்கு முன்னரோ அல்லது பின்னரோ இவ்விபரங்கள் தவறு என அறிய வரும் பட்சத்தில் என்மீது தேர்வுக்குழு எடுக்கும் எவ்வித நடவடிக்கைக்கும் உட்படுகிறேன். மேலும் போட்டித் தேர்வுக்கு தேவையான அனைத்து தகுதிகளையும் பெற்றுள்ளேன் என உறுதி கூறுகிறேன்.

கையொப்பம்

 

இணைப்பு :-

1) பிறப்புச் சான்று (நகல்)

 2) சாதிச் சான்று (நகல்)

 3) கல்வி / இசைத் தகுதி சான்று (நகல்)

 4) அனுபவச் சான்று (நகல்)

 5) மாற்றுத்திறனாளிக்கான சான்று (நகல்).

 

அதிகாரப்பூர்வ அறிவிப்பு/ விண்ணப்பம்

பதிவிறக்கம்

செய்ய


இங்கே கிளிக் செய்யவும் 


Post a Comment

أحدث أقدم
இன்றைய கார்மெண்ட்ஸ் வேலைவாய்ப்புகள் Click here
இன்றைய தனியார் வேலைவாய்ப்புகள் Click here
இன்றைய அரசு வேலைவாய்ப்புகள் Click here