முருக பெருமானுக்கு உகந்த நாளான தைப்பூசத்தின்
சிறப்புகள்
தைப்பூச திருவிழாவினை சுமார் 1500 ஆண்டுகளாக கொண்டாப்பட்டுவருகிறார்கள்.
திருவிடைமருத்தூர் மகாலிங்கஸோவர் கோயிலில் உள்ள கல்வெட்டுகளில் தைப்பூச திருவிழாக்களில் நான்கு நாட்கள் தெரு கூத்துகள் நடத்தப்பட்டதாக
குறிப்பிட்டு உள்ளன.தைப்பூச தினத்தினை முருகன் பிறந்த தினமாக
கொண்டாப்படுகிறது.அதுவும் தை மாதத்தில் வரக்கூடிய தைப்பூசம் முருகனுக்கு மிக
உகந்த தினமாக கருதப்படுகிறது.இந்த தினம் தைமாதத்தில் வரக்கூடிய பூச
நட்சத்தில் பௌர்ணமி
திதியில் கொண்டாப்படுகிறது.


தைப்பூசம் திருவிழாவை உலககொங்கும் தமிழர்கள் வாழும் அனைத்து பகுதிகளிலும் மிக
சிறப்பாக கொண்டப்பட்டு வருகிறது.
தைப்பூசத்தின் சிறப்புகள்
அழகு என்றால் முருகன் அல்லது முருகன் என்றால் அழகு
தைப்பூசதினத்தினை கொண்டாடுவதற்கான சில நிகழ்வுகள் பற்றி
சிதம்பரத்தில் நடன கோலத்தில்
காட்சி தரும் சிவபெருமான் மற்றும் உமாதேவியுடன் நடன ஆடி காட்சி அளித்த
தினத்தின் தைப்பூசம் என்று
கூறுகிறார்கள்.
வடலூரில் அருட்பெருஞ்ஜோதி வள்ளாளர் ஜோதி மாறி தினம்
என்பதால் வடலூரில் உள்ள
மேட்டுக்குப்பத்தில் திருவிழா கொண்டாடுகிறார்கள்.
நட்சத்திரம் பூச நட்சத்திரத்தில் பிறந்த தேவர்களின்
குருவான பிரகஸ்பதி என்பதால்
பூச நட்சத்திரத்தில் குரு
வழிபாடு மிக உகந்து என்பதால் குரு வழிபாடு செய்வது உத்தமம்.
உலகத்தில் உள்ள எத்தனை நாடுகளில் தைப்பூச திருவிழா கொண்டாடுகிறார்கள்
தெரியுமா?
குன்று இருக்கும் இடம் எல்லாம் முருகன் இருப்பான் என்பதை நாம் அறிவோம்.
மாசி மாதத்திலிருந்தோ பக்தர்
மாலை அணிந்து விரமிருந்து தைப்பூசத்திற்கு பாதயாத்திரையாகவும் வருகிறார்கள்.அது போன்று
உலகத்தில் தமிழ்கள் வாழும்
அனைத்து இடங்களிலும் தைப்பூச திருவிழாவினை காவடி எடுத்து, பால் குடம்
மற்றும் விரதம் இருந்து
தமிழர்கள் கொண்டாடி மிகழ்கிறார்கள் என்பதே உண்மை.ஒரு சில நாடுகள் பெயர்கள்
இந்தியா, சிங்கப்பூர் , மலேசியா,
திருச்செந்தூர்,
பழனி, பிஜி,தென்ஆப்பிரிக்கா,
மொரிசியஸ்,.ஈப்போ முருகன் கோயில், இரேயூனியன் ரீயூனியன் தீவு, ஆஸ்திரேலியா,
ஈழத்தில் தைப்பூசம் போன்று செல்லிக்கொண்டே போகலாம்.
தமிழகத்தில் தைப்பூச தினத்தன்று அரசு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
நாம் நினைத்த காரியம் நிறைவேற்றி தந்தமுருக பெருமானுக்கு நன்றி கடன் செலுத்த
பல்வேறு விரத முறைகள் மற்றும் நேர்த்திகடன்களை செய்கிறார்கள். அதில் காவடிகளில்
பல வகை உண்டு
குறிப்பிட நாட்கள்
விரதமிருந்து காவடி எடுக்கின்றனர். அவை பால் காவடி, சந்தன காவடி, விளக்கு
காவடி, சர்ப்பம் காவடி, மயில் காவடி,மச்ச காவடி . தீர்த்த காவடி,மற்றும் பறவை
காவடி போன்றவை. பழநி மற்றும்
திருச்செந்தூர் கோயிலுக்கு பாதயாத்திரையாக செலுக்கின்றனர். அலகு குத்திக்கொண்டு பாதயாத்திரையாகவும் செலுக்கின்றனர். அலகுத்திதலில் பல வகை
அவை நாக்கில் , கன்னங்களில் உடல் முழுவதும், குத்திக்கொள்கின்றனர்.
இன்னும் நிறைய
முருகனின் சிறப்புகளை
செல்லிக்கொண்டே போகலாம்.
தைப்பூச தினத்தன்று
பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. பாதயாத்திரையாக செல்லும்
பக்தர்களுக்கு தயிர், மோர்,
குடிநீர் , போன்றவைகள் வழங்கப்படுகிறது.
தைப்பூச தினம் வியாழக்கிழமை(25.01.2021 ) அன்று பௌர்ணமி திதியில் பூச நட்சத்திரத்தில் வரக்கூடிய தைப்பூச தினத்தில் நாம் நினைத்த காரியம் நிறைவேற்றி தரும்படி முருகனிடம் மனம் உருகிவேண்டிக்கொள்வோம். முருகனின் பூர்ண அருள் நாம் அனைவரும் கிடைக்கட்டும்.
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா!! பால தண்டாயுத பாணிக்கு அரோகரா !! என்று
கூறுவோம்
நன்றி!!!
إرسال تعليق