செப்டம்பர் 1 இறுதி: இதை செய்யலனா இ பி எஃப் கணக்கு முடக்கப்படும்! - முழு விபரம்

 



ஆதார்‌ எண்‌ இணைப்பு காலக்கெடு இ.பி.எப்‌.. எச்சரிக்கை


இ.பி.எப்‌., கணக்கு எண்ணுடன்‌ ஆதாரை
இணைக்க செப்‌., 1ம்‌ தேதி கடைசி நாள்‌ என்றும்‌,
இணைக்காத சந்தாதாரர்கள்‌ பணம்‌ செலுத்‌தவோ எடுக்கவோ, சலுகை பெறவோ முடியாதுன்றும்‌  இ.பி.எப்‌.,எனப்படும்‌ வருங்கால
வைப்பு நிதியம்‌ எச்சரிக்கை விடுத்துள்ளது.
சந்தாதாரர்கள்‌தங்களின்‌ _யு.ஏ.என்‌.,எனப்படும்‌ ஒருங்கிணைந்த கணக்கு எண்ணுடன்‌.ஆதார்‌ எண்ணை இணைக்க ஜூன்‌ 1ம்‌ தேதி வரைஅவகாசம்‌ அளிக்கப்பட்டு இருந்தது. இந்த அவகாசம்‌ கொரோனா தொற்று பரவல்‌ காரணமாக செப்‌.,1 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இ.பி.எப்‌., கணக்கு எண்ணுடன்‌ ஆதார்‌ எண்‌
இணைக்காத சந்தாதாரர்களின்‌ கணக்குக்கு அவர்க.ளது நிறுவனத்திடம்‌ இருந்து சந்தா தொகை வசூலிக்‌கப்பட மாட்டாது. மேலும்‌ சந்தாதாரர்களும்‌ தங்களது கணக்கில்‌ இருந்து பணத்தை எடுக்க முடியாது என்றும்‌ அறிவிக்கப்பட்டுள்ளது..

ஆதார்‌ எண்ணை இணைக்கும்படி நிறுவனங்கள்‌
தங்கள்‌ தொழிலாளர்களுக்கு அறிவுறுத்த வேண்டும்‌
என்றும்‌ இ.பி.எப்‌., வலியுறுத்தி உள்ளது. இணைய
தளம்‌ வாயிலாகவோ அல்லது இ.பி.எப்‌., அலுவல
கத்திலோ ஆதார்‌ எண்ணை இணைக்கலாம்‌.



Post a Comment

أحدث أقدم

TELEGRAM ALERT