ரத்தன் டாடாவின் வாழ்வியல் மற்றும் வெற்றியின் ரகசியம் என்ன!!! 1937 முதல் 2024 வரை
Current
Affairs for Ratan TATA-2024
ரத்தன் டாடாவின் பிறந்தது முதல் இறப்பு வரை அவரின் வாழ்ந்த காலங்கள்
வாரியாக ஒர் சிறிய குறிப்பு
1937: சூனூவுக்கும் நேவல் டாடாவுக்கும் ரத்தன் டாடா பிறந்தார்.
1955: கார்னெல் பல்கலைக்கழகத்திற்கு (இத்தாக்கா, நியூயார்க், அமெரிக்கா) 17 வயதில்
புறப்பட்டார்; ஏழு வருட காலப்பகுதியில் கட்டிடக்கலை மற்றும் பொறியியல் படிப்பிற்கு
செல்கிறார்.
1962:
கட்டிடக்கலை இளங்கலை பட்டம்
வழங்கப்பட்டது.
1962: இப்போது இருக்க டாடா மோட்டார்ஸ் கம்பெனில ஆறு மாசம் பயிற்சியில் ரத்தம் டாட்டா
ஈடுபட்டார்
1963: பயிற்சித் திட்டத்திற்காக அதன் ஜாம்ஷெட்பூரில் உள்ள டாடா அயர்ன் அண்ட் ஸ்டீல்
கம்பெனி அல்லது டிஸ்கோ (இப்போது டாடா ஸ்டீல் என்று அழைக்கப்படுகிறது) க்கு மாற்றப்பட்டது.
1965:
டிஸ்கோவின் பொறியியல் பிரிவில்
தொழில்நுட்ப அதிகாரியாக நியமிக்கப்பட்டார்.
1969: ஆஸ்திரேலியாவில் டாடா குழுமத்தின் பிரதிநிதியாகப் பணியாற்றினார்.
1970: இந்தியாவுக்குத் திரும்பினார், டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் நிறுவனத்தில் சேர்ந்தார்,
அதன் பிறகு ஒரு சாஃப்ட்வேர் வளர்ந்து வந்தது.
1971:
நலிவடைந்த எலக்ட்ரானிக்ஸ் நிறுவனமான
நேஷனல் ரேடியோ மற்றும் எலெக்ட்ரானிக்ஸ் (நெல்கோ என அழைக்கப்படும்) இயக்குநராக நியமிக்கப்பட்டார்.
1974: டாடா சன்ஸ் குழுவில் இயக்குநராக சேர்ந்தார்.
1975: Harvard Business Schoolலில் Advanced Management முடித்தார்.
1981:
டாடா இண்டஸ்ட்ரீஸ் தலைவராக நியமிக்கப்பட்டார்;
உயர்-தொழில்நுட்ப வணிகங்களின் ஊக்குவிப்பாளராக மாற்றும் செயல்முறையைத் தொடங்குகிறது.
1983: டாடா மூலோபாயத் திட்டத்தை வரைவு செய்தார்.
1986-1989:
தேசிய விமான நிறுவனமான (AIR
INDIA)ஏர் இந்தியாவின் தலைவராக பணியாற்றியுள்ளார்
மார்ச்
25, 1991: ஜேஆர்டி டாடாவிடமிருந்து
டாடா சன்ஸ் மற்றும் டாடா அறக்கட்டளைகளின் தலைவராக பொறுப்பேற்றார்.
1991: இந்தியப் பொருளாதாரத்தில் தாராளமயமாக்கல் நடந்து கொண்டிருக்கும் நேரத்தில்
டாடா குழுமத்தின் மறுசீரமைப்பு தொடங்கியது.
2000
முதல்: டாடா குழுமத்தின் வளர்ச்சி
மற்றும் உலகமயமாக்கல் உந்துதல் அவரது பணிப்பெண்ணின் கீழ் வேகமெடுக்கிறது மற்றும் புதிய
மில்லினியம் உயர்தர டாடா கையகப்படுத்துதல்களைக் காண்கிறது, அவற்றில் டெட்லி, கோரஸ்,
ஜாகுவார் லேண்ட் ரோவர், ப்ரன்னர் மோண்ட், ஜெனரல் கெமிக்கல் இண்டஸ்ட்ரியல் தயாரிப்புகள்
மற்றும் டேவூ. .
2008: டாடா நானோவை அறிமுகப்படுத்தியது, அவர் வழிநடத்திய மற்றும் ஆர்வத்துடனும் உறுதியுடனும்
கட்டளையிட்ட சிறிய கார் திட்டத்தில் பிறந்தார்.
2008: இந்திய அரசால் நாட்டின் இரண்டாவது மிக உயர்ந்த குடிமகன் விருதான பத்ம விபூஷன்
வழங்கப்பட்டது.
டிசம்பர்
2012: டாடா குழுமத்துடன் 50
ஆண்டுகளுக்குப் பிறகு டாடா சன்ஸ் தலைவர் பதவியில் இருந்து விலகி டாடா சன்ஸ் நிறுவனமான
எமரிட்டஸ் தலைவராக நியமிக்கப்பட்டார்.
அக்டோபர் 2024: திரு இரத்தினடாடா தனது 86வது வயதில் காலமானார்.
உலகத்தையே ஒரு காலத்தில் திரும்பி பார்க்க வைத்த நபர்களில் ஒருவர் ரத்தன் டாடா
என்று சொன்னால் அது மிகையாகாது.
மிகவும் தன்மைபிக்கையுடைய
நபர் திரு.ரத்தன் டாடா ஆவார். பல தடைகளை தாண்டி இன்று தொழில்துறையில் வைரமாய் ஜொத்துக்கொண்டுள்ளார்.
Ratan Tata Successful
Story!
உங்கள் மீது யாரேனும் கற்கள் வீசினால் அவற்றை வைத்து கட்டிடம் எழுப்புங்கள் என்ற, முதுகில் தட்டிக் கொடுக்கும் வரிகளுக்கு சொந்தக்காரர் ரத்தன் டாடா.
இந்தியாவில் தொடங்கிய தனது வியாபார குழுமத்தினை, உலகெங்கிலும் எடுத்துச் சென்றவர் ரத்தன் டாடா. நாம் சாப்பிடும் உணவில் போடும் TATA உப்பில் தொடங்கி, TATA டீ, கைக்கடிகாரம், நம் வீட்டுச் சுவற்றில் உள்ள இரும்பு, டிடிஹெச், நகை, டாடா பவர், டாடா டெலிகம்யூனிகேஷன்ஸ், தாஜ் ஹோட்டல்ஸ் என ஒவ்வொன்றிலும் டாடாவின் வணிகம் ஜொலிக்கிறது
ரத்தன் டாடா, அமெரிக்காவில் உள்ள ஹார்வார்டு பல்கலைக் கழக்கத்தில் தனது நிர்வாக மேல்படிப்பை படித்தவர். படிப்பை முடித்தவுடன் இன்றளவும் மிகப்பெரிய நிறுவனமாக இருக்கும் ஐபிஎம்மில் பணிக்கு சேர்ந்தவர். எனினும் இந்திய
நாட்டின் மீதுள்ள பற்றின் காரணமாக தான் தாய் நாட்டிற்கு திரும்பினார்.
இதன் பிறகு தனது குடும்ப வணிகத்தில் இறங்கினார். டாடா Group இவரின் Own
Company இருந்தாலும், சிறு பொறுப்புகளில் இருந்துள்ளார். இதனால் வெற்றியின் ரகசியத்தினையும் தெரிந்து கொண்டுள்ளார்.
எனினும் 30 வருட கால கடின உழைப்பின் மூலம் கிடைத்த வெற்றிக்கு பின்னர், 1991இல் டாடா குழுமத்தின் தலைவராகவும், அதன் நிறுவனராகவும் நியமிக்கப்பட்டார். ஆனால் அதுக்கு
அப்புறம் தான் டாடா குழுமம் Big வளர்ச்சியினைக் கண்டது. இதன் பின்னர் தான் இந்தியாவில் குறிப்பிடத்தக்க குழுமங்களில் ஒன்றாக டாடா குழுமம் உருவெடுத்தது.
சர்வதேச சந்தையில் தங்களது நிறுவனத்திற்கான வாய்ப்புகளை தேடிப்பிடித்து கண்டுபிடித்தார். குறிப்பாக கெமிக்கல், டீ, இரும்பு, ஐடி துறை, கார்கள் என பலதுறைகளிலும்
வெற்றிகரமாக தனது தொழில் வர்த்தகத்தினை விரிவுபடுத்தினார். இவரின் தலைமையேற்ற பின்பு தான் டாடா குழுமம் பல சாதனைகளை படைத்தது என்று கூறலாம். பல துறைகளையும் தனது வணிகத்தில் உட்புகுத்தினார். இப்ப இருக்க
முன்னாடி நிறுவனகளில் ஐடில டாட்டா கன்சிலர்
சர்வீஸ் நிறுவனமும் ஒன்று.இது பல ஆயிரம் ஊழியர்களுக்கு வாழ்வளித்து வருகிறது. இந்தியா மட்டும் அல்ல, பல நாடுகளில் டிசிஎஸ் தன் கிளைகளை விஸ்தரித்தது. நிறுவனம்
ஆண்டுக்கு ஒரு பில்லியன் டாலருக்கும் மேல் லாபம் கண்டு வரும் ஒரு மிகப்பெரிய டிசிஎஸ் ஐடி நிறுவனமாகும். டாடா வாகன தயாரிப்பினை பொறுத்தவரையில் அதிலும் தனக்கென ஒரு தனி இடத்தை கொண்டுள்ளது. பல சொகுசு கார் தயாரிப்பு நிறுவனங்களுடன் கூட்டு சேர்ந்து
உற்பத்தி செய்தது அந்த காலகட்டத்தில் இரண்டு லட்சத்துக்கு கார் வாங்கலாம் அப்படிங்கற
நம்பிக்கையை கொடுத்தது டாடா நானோ கார் தான்.இதனால் நடுத்தர மக்களின் (NANO) கார் கனவு மிக எளிதாக நிறைவேற்றியது டாடா நிறுவனம் என்றே கூறலாம்.
(IRON)இரும்பு துறையிலும் தனது காலடியை பதித்த டாடா, உலக அளவில் இரும்பு வணிகத்தினையும் மிகச் சிறப்பாக செய்து இன்று
வரை செய்து வருகிறது. உலகின் ஒருசில நிறுவனங்கள் இந்தியாவை தேடி வர, அமைதியாக தனது வணிகத்தினை உலகின் பல நாடுகளுக்கும் விரிவாக்கத்தினை செய்து வந்தார். சொல்லப்போனால் இந்திய பொருளாதார வளர்ச்சிக்கு இவரின் பங்கும் கணிசமாக உண்டு. பத்மபூஷன்
விருது மற்றும் பத்ம விபூஷன் விருது ரத்தன்
டாட்டாவுக்கு மத்திய அரசு வழங்கி கௌரவித்தது. நிறைய டாட்டா சுமோ கார் எங்களுக்கு வேணும் அப்படின்னு
பாகிஸ்தான் அரசு ஆர்டர் கொடுக்க ஆனால் ஒரு காது கூட கொடுக்க முடியாது என அதை நிராகரித்து
விட்டாராம் டாட்டா
ஆனால் அந்தளவுக்கு தாய் நாட்டின் மீது பற்று கொண்டவர் டாடா. ரத்தன் டாடா, தொழில் நுணுக்கங்களையும் இன்றைய இளைஞர்களுக்கு பயிற்றுவித்தவர் இவரே. அவருடன் தொண்டு நிறுவனத்தின் மூலமாக பல ஏழை குழந்தைகள்
மற்றும் ஆதரவற்ற குழந்தைகள் மாற்றுத்திறனாளிகள் என பல்லாயிரம் பேருக்கு உதவிகளை செய்துள்ளார். 2020-2021 -கொரோனா நிவராண நிதியாக 1,500 கோடி ரூபாயினை வழங்கியவர்.
பிரச்சனைகள் மற்றும் கவலைகள் பற்றி சிந்தித்து கொண்டே
இருந்திருந்தால் ரத்தன் டாடா என்ற நபரை நமக்கு
தெரிந்து இருக்குமா?
”வாழ்வில் நாம் அனைவரும் பிரச்சனைகள் வந்துகொண்டு தான் இருக்கும் அதை நாம்
எப்படி கையாளுகிறோம் என்பது தான் முக்கியம். பிரச்சனைகள் மற்றும் கஷ்டங்களிலிருந்து வெற்றி பெற்று
நாமும் வாழ்வில் முன்னேற்றம் அடையலாம் என்பதே ரத்தன் டாடாவின் வாழ்வியல் தத்துவம்
புரிகிறது.”
கருத்துரையிடுக